Friday, October 17, 2014

முன்னுதாரணம்!

தொழிற்சங்கங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோரில் பெரும்பான்மையினர் (Serving Employee) பணியில் உள்ளோராக
இருக்கவேண்டும். பணி ஓய்விற்குப் பிறகு நடக்கும் மாநாடுகளில் தங்களது சங்க பொறுப்பை மீண்டும் ஏற்காமல், இளைய தலைமுறைக்கு வழி விட்டு,அவர்களுக்கு ஆலோசகர்களாக, வழிகாட்டிகளாக மூத்த தலைவர்கள் இருக்க வேண்டும்.
இதனை பல அரங்குகளிலும் வலியுறுத்தி வருபவர் தோழர் சி.கே.மதிவாணன்.
மாநாட்டில் அனைவரும் எழுச்சி பெறும் வகையில் நீண்ட உரையாற்றிய துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன்,
இறுதியில், தனது நிலைபாட்டை நிறைவேற்றும் வகையில்
தான் பணி ஓய்வு பெற்ற பிறகு முதன் முதலாக நடக்கும்
இம்மாநாட்டில் மத்திய சங்க பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
பல தோழர்கள் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய
வேண்டும் என்று வலியுறுத்திய போதும், தான் அவர்களது
உணர்வை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், தனது நிலைபாட்டை மாற்றுவது சாத்தியமில்லை என்று நயமாக எடுத்துரைத்தார். அது மட்டுமல்லாது, மற்ற புதிய நிர்வாகிகளை மன மகிழ்ச்சியோடு அவரே முன்மொழிந்தார்.

அகில இந்திய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி  இங்கே!

2 comments:

Anonymous said...

appo ithu manilap poruppukku kidaiyaatha!

NHTE Trichy said...

ஒரு நல்ல எடுத்துகாட்டை, தொழிற்சங்க நடைமுறையில் ஒரு புதிய மாற்றத்தை, ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணத்தை வரவேற்ப்பது, பாராட்டுவது என்பது தொழிற்சங்க வளர்ச்சிக்கான ஒரு உந்துதல் தான்.
பொறுப்புக்களை ஏற்பதும் விட்டுவிட்டு மற்றவர்களுக்கு கொடுப்பதும் ஒரு மாநாட்டில் நடைமுறை படுத்தமுடியும். பாதியில் வீசிவிட்டு செல்வது யாரின் செயல்?

எதையும் முரண்பாடாக குருக்குபுத்தியுடன் யோசிப்பது என்பது மூளை சீக்கு பிடித்தவனின் செயலாகும்.
ஏன் அனாமதேயமாக (Anonymous) ஒளிந்துகொள்கிறீர்கள்? வெளிப்படையாக வாருங்கள். நாமும் விவாதத்துக்கு தயார்.