Thursday, April 27, 2017
Friday, March 17, 2017
வீட்டு வாடகை ரசீது கேள்வியும் பதிலும்!!
கேள்வி : வருமான வரி விலக்கிற்காக பலர் வாடகை ரசீது கொடுத்துள்ளனர்.
இப்போது வீட்டு உரிமையாளரின் PAN Number உடன் உரிய படிவத்தில் கொடுக்க வேண்டும் என AO Drawal தெரிவிக்கிறார். ?இல்லை எனறால் கூடுதல் வரி பிடித்தம் இருக்கும் என்கிறார் .
PAN No. கொடுப்பது எப்படி சாத்தியம் ? எத்தனை வீட்டு உரிமையாளர்கள் PAN No. வைத்திருக்கிறார்கள் ?
பதில்: மாத வீட்டு வாடகை 8333 க்குள் அல்லது வருட மொத்த வாடகை 1,00,000 க்குள் இருந்தால் வீட்டு உரிமையாளரின் PAN No. கொடுக்கவேண்டியதில்லை.
1,00,000 க்கு மேல் இருந்து வீட்டு உரிமையாளரிடம் PAN No. இல்லை என்றால் ஊழியர் ஒரு declaration கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால் அனைவரும் printed ரசீது கொடுக்க வேண்டும் .
கேள்வி : வருமான வரி விலக்கிற்காக பலர் வாடகை ரசீது கொடுத்துள்ளனர்.
இப்போது வீட்டு உரிமையாளரின் PAN Number உடன் உரிய படிவத்தில் கொடுக்க வேண்டும் என AO Drawal தெரிவிக்கிறார். ?இல்லை எனறால் கூடுதல் வரி பிடித்தம் இருக்கும் என்கிறார் .
PAN No. கொடுப்பது எப்படி சாத்தியம் ? எத்தனை வீட்டு உரிமையாளர்கள் PAN No. வைத்திருக்கிறார்கள் ?
பதில்: மாத வீட்டு வாடகை 8333 க்குள் அல்லது வருட மொத்த வாடகை 1,00,000 க்குள் இருந்தால் வீட்டு உரிமையாளரின் PAN No. கொடுக்கவேண்டியதில்லை.
1,00,000 க்கு மேல் இருந்து வீட்டு உரிமையாளரிடம் PAN No. இல்லை என்றால் ஊழியர் ஒரு declaration கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால் அனைவரும் printed ரசீது கொடுக்க வேண்டும் .
Thursday, March 16, 2017
அஞ்சல் அட்டை... அனுப்பும் இயக்கம்!
கோழிக்கோடு தேசிய செயற்குழு முடிவின் படி ...
நிதி ஆயோக் பரிந்துரையின் அடிப்படையில், BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத் துடிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும்,
தனி, துணை டவர் கம்பெனி உருவாக்கத்தை எதிர்த்தும்
பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் 16-03-2017 தொடங்கி 15-04-2017 வரை நடத்தப்பட வேண்டும்.
கிளை செயலர்கள் அனைத்து உறுப்பினர்களையும் அணுகி கீழே குறிப்பிட்டவாறு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பும் வேலையை செய்து முடித்திட வேண்டும்.
சிறப்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
BSNL ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் திருச்சி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU சங்கமும் இணைந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றது.NFTE மாவட்ட தலைவர் தோழர். P சுந்தரம், BSNLEU மாவட்ட தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமையில்,
- மூன்றாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை துவக்கு…
- ஊதியக்குழு சம்பந்தமான DPE வழிகாட்டுதலை வெளியிடு…
- BSNL நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்காதே…
- தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்காதே…
ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தியும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்
ஆர்ப்பாட்டம்.சிறப்பாக நடைபெற்றது.
NFTE மாவட்ட செயலர் S பழனியப்பன், துணை செயலர் பாலகுரு, TEPU மாநில தலைவர். இளங்கோவன், மாவட்ட செயலர் ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர் அஸலம் பாஷா, துணை செயலர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில துணைத்தலைவர் தோழர். ஆறுமுகம், சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆசைத்தம்பி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் முழுதும் இருந்து கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்ட பதிவுகளை காண கீழே சொடுக்கவும். ↓↓↓
Wednesday, March 15, 2017
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாள்: 16-03-2017, பிற்பகல் 01:15 மணி.
இடம்: PGM அலுவலகம், திருச்சி.
கோரிக்கைகள்:
v மூன்றாவது
ஊதியக்குழு பேச்சுவார்த்தையை துவக்கு…
v ஊதியக்குழு
சம்பந்தமான DPE வழிகாட்டுதலை வெளியிடு…
v BSNL நிறுவனத்தை
தனியாருக்குத் தாரை வார்க்காதே…
v தனி செல்கோபுர
நிறுவனம் ஆரம்பிக்காதே…
திரளாக கலந்துகொள்வீர்!
Saturday, March 11, 2017
நெடுவாசல் போராட்ட ஆதரவு ஆர்ப்பாட்டம்!

- விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரித்து.
- சேலம் மாநில சங்க செயற்குழு முடிவின்படி,
06-03-2017 அன்று மாலை முசிறி தொலைபேசியகம் முன்பு நமது மாவட்ட சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
மாவட்ட துணை செயலர் தோழர். பாலகுரு மற்றும் ஞானவேல் அவர்களின் முழக்கங்களுடன், மாவட்ட செயலர் S பழனியப்பன், மாநிலசெயலர் K நடராஜன் ஆகியோர் நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்து பேசினார்.
ஒலிபெருக்கி இல்லாமலேயே மாநில செயலர் கணீர் குரலில் ஆற்றிய உரை மக்களை வெகுவாக ஈர்த்தது.
சிறப்பான மாவட்ட செயற்குழு!


நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 06-03-2017 அன்று முசிறியில் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் ஜவஹர், திருப்பதி, அவர்களின் தலைமையில் மாவட்ட துணை செயலர் தோழர் மில்டன் அவர்களின் வழிகாட்டலில் முசிறி தோழர்கள் நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
22 கிளை செயலர்கள், 13 மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் , 5 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற முழுமையான செயற்குழுவாக அமைந்தது.
மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் தலைமையில், தோழர் ஜவஹர் வரவேற்புரையாற்ற தோழர் பாலகுரு அஞ்சலியுரையுடன் செயற்குழு தொடங்கியது. மாவட்ட செயலர் தோழர். S பழனியப்பன் அவர்களின் அறிமுக உரைக்கு பிறகு 20 கிளை செயலர்கள், 10 மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் பொருளாய்வு விவாதத்தில் கலந்துகொண்டனர்.
- கிளை மாநாடுகள்,
- ஒற்றை இலக்க உறுப்பினர் கிளைகள் இணைப்பு,
- உறுப்பினர் மாற்றல் பிரச்சனைகள்,
- பாட்டரி, பவர் பிளான்ட் பிரச்சனைகள்,
- கேபிள் பழுதுகள்,
- மொபைல் கவரேஜ்,
- TOPUP கார்டு அளித்தலில் உள்ள குறைபாடு,
- விஜய் ப்ராஜெக்ட் இன்சென்டிவ்,
- NPC இன்சென்டிவ்,
- உபகரணங்கள் வழங்கல் குறைபாடு,
- கேபிள் கான்ட்ராக்ட் பிரச்சனை,
- ஒப்பந்த ஊழியர் பணி நேர உயர்வு மற்றும் கூலி உயர்வு,,
- ஆளில்லா தொலைபேசியக செயல்பாடு,
- மாவட்ட சங்க செயல்பாடு
- எதிர்நோக்கும் ஊதிய மாற்றம்,
- எதிர்வரும் போராட்டங்கள்
முசிறி துணைக்கோட்ட அதிகாரி திரு. கிருஷ்ணா சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மாநில செயலர் தோழர். நடராஜன் அவர்கள் நடந்து முடிந்த அகில இந்திய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 09-03-2017 அனைத்து சங்க பேரணி, 16-03-2016 கோரிக்கை ஆர்ப்பாட்டம், தபால் அட்டை இயக்கம், ஊதிய மாற்ற பிரச்சனையில் மத்திய சங்க செயல்பாடுகள், மாநில மட்ட பிரச்னை தீர்வுகள் ஆகியவை பற்றி விளக்கி சிறந்ததொரு உரையை வழங்கினார்.
தோழர் மனோகரன் அவர்களின் நன்றியுரையோடு செயற்குழு சிறப்பாக நிறைவுபெற்றது.
மாநில செயலர் தோழர். நடராஜன் அவர்கள் நடந்து முடிந்த அகில இந்திய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 09-03-2017 அனைத்து சங்க பேரணி, 16-03-2016 கோரிக்கை ஆர்ப்பாட்டம், தபால் அட்டை இயக்கம், ஊதிய மாற்ற பிரச்சனையில் மத்திய சங்க செயல்பாடுகள், மாநில மட்ட பிரச்னை தீர்வுகள் ஆகியவை பற்றி விளக்கி சிறந்ததொரு உரையை வழங்கினார்.
தோழர் மனோகரன் அவர்களின் நன்றியுரையோடு செயற்குழு சிறப்பாக நிறைவுபெற்றது.
Wednesday, March 8, 2017
Wednesday, February 22, 2017
மாவட்ட செயற்குழு அறிவிப்பு
நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் 06-03-2017 அன்று முசிறியில் காலை 09:30 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர். P சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
தோழமையுள்ள,
S.பழனியப்பன்,
மாவட்ட செயலர், NFTE,
திருச்சி.
திருச்சி.
பொருள்
1, அமைப்பு நிலை,
2, கிளை மாநாடுகள்,
3, ஊழியர் பிரச்சனைகள்.
4, அகில இந்திய / மாநில செயற்குழு முடிவுகள்,
5, ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்,
6, போராட்டங்கள்,
7, இன்ன பிற - தலைவர் அனுமதியுடன்.
செயற்குழு நிகழ்விடம்:
IMA திருமண மண்டபம்,
திருச்சி ரோடு ,
தாலுகா அலுவலகம் அருகில்,
முசிறி.
Friday, February 10, 2017
Tuesday, February 7, 2017
செய்திகள் !
- நமது சர்வீஸ் SIM-லிருந்து தனியார் மொபைலுக்கு மாதம் ரூ.50/-மதிப்பிலான அளவில் பேச அனுமதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
- டெலிகாம் டெச்னிசியன் பதவி உயர்வு தேர்வை ONLINE முறையில் தேர்வெழுத வேண்டும் எனும் முடிவை மத்திய சங்கம் நிராகரித்துள்ளது .
- நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய வாரியம் அமைக்க BSNL நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது .நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய பலன் அடிப்படை ஊதியத்தில் 3 % BSNL ன் பங்களிப்பாக இருக்கும் .
CHQ NEWS
- The upgradation of senior Accountants to Executive grade:- The DOT has cleared and now it is in active consideration of BSNL HQR. Separate POS will be issued after grant of Executive scale.
- Pensionery benefits to DR BSNL recruited employees:- BSNL Board meeting took place on 31st January and it has approved 3% contribution for pensionery benefits. The contribution will be deposited in LICE for from March, 2017. Director (HR), GM(Est), GM(F & P) etc will be in trust. Steps are being taken for registeration of Trust and clearance from Income Tax. NFTE is persuing the matter vigorously.
- Online LICE for promotion to TT(formerly TM) Cadre not acceptable:- NFTE has told GM(Rectt) clearly that proposed online LICE is not acceptable.
Tuesday, December 6, 2016
Subscribe to:
Posts (Atom)





























