கீரனூர் கிளை மாநாடு!
கீரனூர் கிளையின் கிளை மாநாடு 15-02-2014 அன்று மாலை 04:00 மணி அளவில், கிளை தலைவர் தோழர் V . நல்லையா அவர்கள் தலைமையில், தோழர் சாலை.கிருஷ்ணமூர்த்தி நினைவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.



ஒப்பந்த ஊழியர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
மாநில துணை செயலர் தோழர். சுந்தரம் சிறப்புரையாற்றினார்.
கிளையின் புதிய பொறுப்பாளர்களாக தோழர்கள் மாணிக்கம், வில்லியம் ஹென்றி, ராஜேந்திரன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை பொருளர் தோழர்.ராஜேந்திரன் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
சிறந்த சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மிக சிறப்பாக மாநாட்டு ஏற்பாடுகளை செய்திருந்த கிளை செயலர் தோழர்.ஹென்றி அவர்களை அனைவரும் பாராட்டினர்.
No comments:
Post a Comment