Saturday, July 14, 2012

வேண்டாம்! விபரீத விளையாட்டு!!


23-06-2012 (திருச்சி) மற்றும் 11-07-2012 (புதுக்கோட்டை) ஆகிய தேதிகளில் நடந்த AIBSNLEA கூட்டங்களில், அச்சங்கத்தின் மாநில செயலர், உடன்பாட்டு விளக்கம் என்ற பெயரில் NFTE சங்க தலைவர்களை பற்றி மிகவும்  தரம் தாழ்ந்த வகையில் அநாகரிகமாக பேசியும், NFTE திருச்சி மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றி தேவையற்ற விமர்சனங்களை செய்துள்ளதாக தெரிகிறது.


12-06-2012 - உடன்பாடு ஒன்றும் புனித புத்தகம் அல்ல! அதன் மீது யாரும் விமர்சனம் செயக்கூடாது என்று சொல்வதற்கு!! அவர் வேண்டுமானால் அதை ஒற்றுமை முலாம் பூசி அடைகாத்து கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை. தனது புதிய நண்பர்கள் நம்பூதிரி, அபிமன்யு & கோ விடம் விசுவாசமாகவும் இருக்கட்டும். ஆனால் அதை வெளிப்படுத்த NFTE மீது தேவையற்ற விமர்சனங்களை வீசும் விபரீத விளையாட்டு வேண்டாம்!

No comments: