Saturday, February 9, 2019

புதுக்கோட்டை வேலை நிறுத்த விளக்க கூட்டம்.

18-02-2019 முதல் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம். கோரிக்கை விளக்க, போராட்ட தயாரிப்பு கூட்டம் 08-02-2019 அன்று மாலை 04:30 மணி அளவில் புதுக்கோட்டை தொலை பேசி நிலையத்தில் நடைபெற்றது. தோழர். சிதம்பரம், கிளை தலைவர் NFTE அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் முத்து, NFTE துணை செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர். ஆசைதம்பி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், NFTE, தோழர். மாரியப்பன்,  கிளை செயலர், AIBSNLEA, தோழர். சக்திவேல், மாவட்ட நிதி செயலர், SNEA, தோழர். சசிகுமார், மாவட்ட செயலர், AIBSNLEA, தோழர்.S.பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE, தோழர். S.அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி, போராட்டத்தின் அவசியத்தை விளக்கினர். தோழர். ஆறுமுகம், கிளை செயலர், BSNLEU நன்றி கூறினார்.Saturday, November 3, 2018

Meeting between the Secretary, Telecom and the AUAB:

A meeting between Ms.Aruna Sundararajan, Secretary, Telecom and the All Unions and Associations of BSNL(AUAB) was held today. 

Com.P.Abhimanyu, GS/BSNLEU, Com.Chandeswar Singh, GS/NFTE, Com.K.Sebastin, GS/SNEA, Com. Prahlad Rai,GS/AIBSNLEA, Com. Ravi Shil Verma, GS/, AIGETOA, Com. Suresh Kumar,GS/BSNL MS, Com. Revti Prasad, AGS/BSNL ATM, Com. Rashid Khan, AGS/TEPU and Com.H.P.Singh, Dy.GS/BSNL OA participated in the talks on behalf of the AUAB. 

From the DoT, Ms. Anuradha Mitra/Member(Finance), Shri Ravi Kant/ Member(Services), Shri.N.Sivasailam/Special Secretary and Shri R. K. Khandelwal/ Joint Secretary(Admn) Shri Pawan Gupta,Director (PSU),Shri Sanjay Agarwal,Director(Esst) of participated.

From the BSNL Management side, Shri Anupam Shrivastava/CMD BSNL, Ms. Sujata Ray/ Director(HR), Shri Saurab Tyagi/Sr.GM(Estt) , Shri. A.M.Gupta/ GM(SR) and Shri Sheo Shankar Prasad/DGM(Estt.) participated.

At the outset, the representatives of the AUAB pointed out that DoT failed to take appropriate action to implement the assurances given by the Hon’ble MoS(C) in the meeting held on 24-02-2018, in view of which the AUAB has been compelled to go on agitational programme. On the 3rd Pay Revision issue, the Secretary, Telecom assured that the Cabinet Note, for getting the approval of the Cabinet, would be sent at the earliest. The AUAB pointed out that within three months the Pay Revision issue has to be settled fully, otherwise, Parliament elections would be announced; settlement of Pay Revision would become difficult. 

Secretary informed that some queries are there from IFD, it will be raised by DoT to BSNL in a week and BSNL assured to reply all the queries within one week time ,As and when BSNL replies and after the discussion with CMD BSNL it will be processed. AUAB demanded the formalities of Cabinet memo to be completed before this month. Secretary, Telecom assured to act fast.

On the issues of allotment of 4G spectrum, Payment of Pension Contribution on the actual basic pay and Pension Revision issues, very useful discussion took place. On the 4G issue, the Cabinet Note has been sent for inter-ministerial consultation, and at the earliest it will be sent for the approval of the Cabinet. On the issue of Payment of Pension Contribution on actual basic pay instead of maximum of the pay scale , the matter is being recommended for the approval of the Department of Expenditure, with a positive note of the DoT, by next week. On the Pension Revision of BSNL retirees, the Secretary Telecom appeared to be convinced with the arguments of the AUAB, that it should not be linked with the Pay Revision of the serving employees. She directed the Member (Services) to immediately discuss the issue with her. On the 30% Superannuation benefits for the Directly Recruited employees, the Secretary Telecom said that it should be settled by the BSNL. Thereafter CMD assured to examine another 2%.

After the meeting with the Secretary, Telecom, the meeting of the AUAB was held. The meeting expressed it’s satisfaction about the discussions on the issues of Allotment of 4G spectrum, Payment of Pension Contribution and Pension Revision. However, the meeting viewed that there is no improvement in the matter of 3rd Pay Revision. Hence, the meeting decided to go ahead with the agitational programme of Rally on 14.11.2018. The meeting called upon the employees to effectively organise the rallies on 14-11-2018. It is decided that the AUAB will again meet on 14-11-2018, to review the situation.

Organisational decisions of the AUAB:
Prior to the meeting with the Secretary, Telecom, a meeting of the AUAB was held at NFTE’s office, under the chairmanship of Com. Chandeswar Singh, GS, NFTE BSNL. After finalising the strategy to be adopted in the meeting with the Secretary, Telecom, the meeting discussed about the ways and means to strengthen the unity of the AUAB and its functioning. After detailed discussion, the following decisions are taken unanimously:-
(1) Com.Chandeswar Singh, GS, NFTE BSNL, is elected as the Chairman of the AUAB.
(2) Com.P.Abhimanyu, GS, BSNLEU, is elected as the Convenor of the AUAB.
(3) Notices for struggles will go with the signatures of all the General Secretaries of the constituents.
(4) All other letters / communications to the BSNL Management/ DoT / Government, will be signed by the Chairman and the Convenor.
(5) AUAB should immediately be formed at all circles and districts, wherever it is not formed so far. As regards the posts of Chairman and Convenor, the pattern adopted at the All India level should be adopted at the circle and district levels also.

Saturday, October 20, 2018

வெற்றிகரமான மாவட்ட செயற்குழு!

நமது மாவட்ட செயற்குழு 16/10/2018 காலை 1030 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். M பாலகுரு அவர்கள் அஞ்சலியுரை ஆற்ற, தோழர் மில்டன் அனைவரையும் வரவேற்றார்.
தோழர் செம்மல் அமுதம் மாவட்ட செயற்குழுவை துவக்கி வைத்து, 3வது சம்பள மாற்றம், டவர்கள் தனியாரிடம் விடப்பட்டது, வருங்கால போராட்ட அறிவிப்பு குறித்து உரையாற்றினார்.

மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைத்தார். கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.
மாநில உதவி தலைவர்கள் தோழர் சேதுபதி, தோழர் ஆறுமுகம் பங்கேற்று திருச்சி SSA வில் NFTE சங்கத்தின் வளர்ச்சிக்கான தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். 
இறுதியில் நமது தமிழ் மாநில செயலர் தோழர் நடராஜன் அவர்கள் விழா நிறைவு பேருரையாற்றினார். சமீபத்தில் நடந்த மாநில LJCM முடிவுகள், சம்பள மாற்றம், வருங்கால போராட்டங்கள் குறித்தும , உறுப்பினர்கள் விவாதத்தின் ஊடே எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட பொருளர் தோழர்.ஆண்டிசாமி நன்றி கூற செயற்குழு நிறைவடைந்தது.

  • ஆளில்லாத தொலை பேசி நிலையங்களுக்கு மற்றும் செக்யூரிட்டி பணிக்கு முழு நேர ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்
  • பவர் பிளான்ட் மற்றும் பாட்டரி ஆகியவற்றை மாற்றி சேவையை மேம்படுத்த வேண்டும்.
  • பழுதடைந்துள்ள அம்மாபட்டினம் ஜெயந்கொண்டம் உள்ளிட்ட தொலை பேசி நிலையங்களை உடனடியாக சரி செய்யவேண்டும்.
  • காத்திருப்பு பட்டியலில் உள்ள தோழர்களுக்கு மாற்றல் வழங்க வேண்டும்.
  • சேவை மேம்பாட்டிற்காக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது 
  • ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அனைத்து சங்க (AUAB) அறிவித்துள்ள போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


வைரஸ் பாதிப்பால் நமது இணையதளம் சில மாதங்களாக இயங்கவில்லை. 
இப்போது முதல் எல்லாம் சரி!
மீண்டும் ... தொடர்வோம்!Monday, December 11, 2017

Thursday, November 23, 2017

வலிமையான மனித சங்கிலி இயக்கம்!

மிகுந்த எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக, 100 பெண் தோழர்கள் உள்ளிட்ட 400 க்கும் அதிகமான தோழர்கள் கலந்துகொண்ட மனித சங்கிலி இயக்கம் திருசயில் நடைபெற்றது . ஊதிய மாற்றம் , தனி டவர் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு என இரட்டை கோரிக்கைகளை உரத்து சொல்லிய இயக்கமாக இது அமைந்ததுதொடர் கூட்டங்கள் 

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3 வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்கு.
BSNL ஐ நலிவுற செய்யும் தனி டவர் நிறுவன உருவாக்கத்தை கைவிடு.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள வேலை  நிறுத்த போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டி வலு சேர்க்கும் பொருட்டு திருச்சி தொலை தொடர்பு மாவட்டம் முழுதும் ஒன்று பட்ட கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 சில பதிவுகள்...

திருச்சி EWSD-1 கூட்டம்.புதுக்கோட்டை கூட்டம்.


DTAX கூட்டம்Tuesday, May 30, 2017

GPF  பட்டுவாடா புதிய நடைமுறை
மாதம் 3 முறை என உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது

GPF withdrawal / Advance பட்டுவாடா இனி CCA , Tamilnadu  (DOT Cell ) மூலம் வழங்கப்படும். அதற்கான புதிய நடைமுறை கீழ்க்கண்டவாறு  அறிவிக்கப்பட்டுள்ளது. 

1.     ஒவ்வொரு மாதமும் 4, 12, மற்றும் 20 ஆகிய தேதிகளில் GPF பட்டுவாடா இருக்கும்.
2.   பட்டுவாடா செய்யப்படவேண்டிய ஊழியர்கள் பட்டியல் BSNL -ல் இருந்து கிடைக்கப்பெற்ற 5 வேலை நாட்களுக்குள் பண பட்டுவாடா இருக்கும்.
3.  GPF தொகை அவரவர் சம்பத்திற்கான வங்கி கணக்கில் CCA , Tamilnadu  (DOT Cell ) மூலம் நேரடியாக செலுத்தப்படும்.
4.      விண்ணப்பிக்கும் மற்றும் பட்டுவாடா தேதிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
விண்ணப்பிக்கும் தேதி
பட்டுவாடா தேதி
அந்த மாதம் 7 ம் தேதி வரை 
அந்த மாதம் 12 ம் தேதி 
அந்த மாதம் 16 ம் தேதி வரை 
அந்த மாதம் 20 ம் தேதி 
அந்த மாதம் 25 ம் தேதி வரை 
அடுத்த மாதம் 4 ம் தேதி 
5.   ஒவ்வொருவர்க்கும் DOT  Cell கணக்கில் உள்ள GPF  இருப்பு தொகையை பொறுத்து பண பட்டுவாடா இருக்கும்.

6.  இந்த மாதம், 27-05-2017 க்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதிக்குள் பணப்பட்டுவாடா இருக்கும்.

Friday, May 5, 2017

மலரட்டும் மண்ணுக்கேற்ற 

மார்க்ஸியம்!

*** தமிழ் ஹிந்து தலையங்கம்***


உற்பத்தியில் மூலதனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் உழைப்புக்கும் உண்டு. ஆனால், உபரியாகக் கிடைக்கிற லாபம் மூலதனத்தையே சேர்கிறது. உழைப்புக்குக் கிடைக்கும் பயன் கூலியாக மட்டுமே இருக்கிறது. அந்தக் கூலியும் அத்தியாவசியத் தேவையையும் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமானதாய் இருப்பதில்லை.

நிலவுடைமைச் சமுதாயம், ஆலை உற்பத்திக்கு மாறிய கால கட்டத்தில் தொழிலாளர்களின் ஒருங்கிணைவுக்கு ஒரு சாத்தியம் உருவானது. அந்த ஒருங்கிணைவு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் ஒருசேர மதிப்பளிக்கும், இரண்டையும் ஒன்றாக்கும் ஒரு சோஷலிச கனவுக்கு வித்திட்டது. அது வெறும் கனவு மட்டுமல்ல. மானுட வரலாற்றின் கால மாற்றங்களில் கட்டாயம் நடக்க வேண்டிய மாற்றம் என்பதை தனது மூலதனம் நூலில் அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்தார் காரல் மார்க்ஸ். உற்பத்தி முறையின் மாற்றங்களுக்கு ஏற்ப, சமூகத்தின் சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் வரலாற்றுரீதியில் நிரூபித்தார்.

மார்க்ஸ் ஐரோப்பிய ஆலை உற்பத்தி முறையில் எதிர்பார்த்த சோஷலிச கனவு, ரஷ்யாவின் நிலவுடைமைச் சமுதாயத்தில் நிறைவேறி இடைநின்றுவிட்டது. அதேவேளையில் கியூபா, வெனிசுலா என்று உலகத்தின் பல நாடுகளும் சோஷலிச கனவை இயன்றவரைக்கும் நனவாக்கியுள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் கையில் மத்திய அரசு வரவில்லையென்றாலும், மார்க்ஸின் தாக்கம் நேருவிய காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது. விளைவாக, இந்திராவின் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பின் விழுமியங்களில் ஒன்றாக அதன் முகப்புரையில் இடம்பெற்றது. ஆக, உலகில் மார்க்ஸ் தாக்கம் ஏற்படுத்தாத சமூகம் என்று ஒன்று இன்றில்லை எனலாம்.

முதலாளித்துவமானது சோஷலிசத் திட்டங்களுக்கு எதிராக தன்னைத் தக்கவைத்துக்கொள்வதில் முன்னெப்போதைக் காட்டிலும் மிகப்பெரிய வியூகங்களை வகுத்துக்கொண்டுள்ளது. காரல் மார்க்ஸின் அறைகூவலை தொழிலாளர் சமூகம் காதுகொடுத்துக் கேட்கும் முன்பே உலக முதலாளிகள் ஒன்றுகூடிவிட்டார்கள். இன்றைய நவீனப் பொருளாதார யுகத்தில், பண்டங்கள் என்பது உற்பத்திப் பொருட்கள் மட்டுமல்ல, சேவைப் பணிகள், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை, தொழில்நுட்பம் என்று அதன் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. மூலதனம் இன்று தனிநபர் முதலீடு என்ற நிலையையெல்லாம் தாண்டி, பன்னாட்டு எல்லைகளில் விரவி நிற்கிறது. பங்கு முதலீடு என்ற கண்ணுக்குத் தெரியாத மாயக்கரங்களால் இன்றைக்கு உற்பத்தி ஆட்டிவைக்கப்படுகிறது. இந்தப் புதிய சூழலையும் மனதில் கொண்டுதான் இனி சோஷலிசத் திட்டங்கள் வகுக்கப்பட்ட வேண்டும்.

காரல் மார்க்ஸ் மூலதனத்தை எழுதிய நாட்களில் உலக வர்த்தக நிறுவனம் போன்ற முதலீடுகளைப் பாதுகாக்கும் அமைப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு உடன்படிக்கைகளின் வழியாக, உலக நாடுகள் இயற்றும் சட்டங்களுக்கெல்லாம் முன்வரைவைத் தயாரித்து அளித்துக்கொண்டிருக்கிறது. விவசாயம் தொழில்துறையின் வசமாகிறது. விதைகளும் காப்புரிமையின்கீழ் பண்டங்களாக்கப்பட்டுவிட்டன. உற்பத்தியில் உழைப்பின் பங்கைக் காட்டிலும் முதலீடே முதன்மை வகிக்கிறது. இந்தப் புதிய பொருளாதாரச் சூழலில் காரல் மார்க்ஸ் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். இந்தியாவில் இந்த மண்ணுக்கு ஏற்றதாக மார்க்ஸியம் மலரும் நாளில், இந்தியாவின் முழுமையான சோஷலிச கனவும் நிறைவேறும்.
மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் பனி நிறைவு பாராட்டு விழா பதிவுகள்!மேலும் பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்...