Friday, March 29, 2013

28-03-2013 அன்று புதுக்கோட்டை-ல் மாநில பொருளர் தோழர் அசோக்ராஜன் கலந்துகொண்ட தேர்தல் சிறப்பு கூட்டத்தின் பதிவுகள்.









இச்சிறப்பு கூட்டத்தில் மாநில துணை செயலர் தோழர் சுந்தரம், SNATTA மாவட்ட செயலர் தோழர் முரளிதரன், மாவட்ட செயலர் பழனியப்பன், தஞ்சை மாவட்ட செயலர் தோழர் பன்னீர் செல்வம், அவருடன் திருவாரூர் சேகர் உள்ளிட்ட பல தஞ்சை தோழர்கள் மற்றும் மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் தோழர்கள் ஆசைதம்பி, நாகராஜன், பாலகுரு, மில்டன் உள்ளிட்ட சுமார் 100 தோழர்கள் கலந்துகொண்டனர். மாலை 04:30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் இரவு 08:45 வரை நடந்த உணர்வு பூர்வமான கூடமாக அமைந்தது. 
          தஞ்சை மாவட்ட செயலர் தோழர் பன்னீர் செல்வம் இயல்பான பாணியில் பேசிய விதம் அனைவரையும் ஈர்த்தது. 
         மாநில பொருளர் தனது உரையில் இத்தேர்தல் களம் Impossible -க்கும் possible க்கும் இடையேயான போட்டி என குறிப்பிட்டார். BSNLEU பொது செயலர் தோழர்.அபிமன்யு "இனி BSNL -ல் பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து வெற்றி பெறுவது எனபது impossible " என பாண்டி கூட்டத்தில் பேசியதை சுட்டிக்காட்டினார். 8 ஆண்டு கால தனது அங்கீகார காலத்தில் அனைத்தையும் வீணடித்துவிட்டு இன்று Impossible என பேசுவது அவர்களது இயலாமையை, செயலற்ற தன்மையை உணர்த்துவதாக உள்ளது என்றார்.
          ஆளெடுப்பு தடை சட்டம் இருந்த பொது தான் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மஸ்தூர் களை நிரந்தரம் செய்து Possible என சாதனை செய்துகாட்டிய சங்கம் NFTE. மத்திய அரசு ஊழியர்களில் அதிக போனஸ் பெற்று possible என செய்து காட்டியது NFTE. 2005 வரை BSNL நிறுவனத்தை வளம் கொழிக்கும் நிறுவனமாக ஆக்கி possible என சாதனை செய்துகாட்டிய சங்கம் NFTE. தேர்தலை விட ஊழியர் நலன் முக்கியம் என 2001-ல் ஒரு ஒன்று பட்ட பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த முதல் ஊதிய மாற்றம் possible என செய்த வல்லமை படைத்த சங்கம் NFTE என NFTE ன் சாதனைகளை பட்டியலிட்டார். 

            கூட்ட ஏற்பாடுகளை புதுகை தேர்தல் பணிகுழு தலைவர் தோழர்  வேலு தலைமையில் சிறந்த ஏற்பாடுகளை புதுகை தோழர்கள் செய்திருந்தனர்.

No comments: