Saturday, April 13, 2013

பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம்! - 11-04-2013 அன்று திருச்சி-ல் !! தோழர் மதி எழுச்சியுரை!!!

         11-04-2013, பிற்பகல் 01:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை திருச்சி PGM அலுவலக வளாகத்தில் மிக பிரமாண்டமான தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுதும் இருந்து 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். 
           மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் வரவேற்புரையாற்றினார். SNATTA மாவட்ட செயலர் தோழர் முரளிதரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் தோழர் நாகராஜன், மாநில துணை செயலர் சுந்தரம், மாநில துணை தலைவர் மனோகரன் ஆகியோர் BSNLEU சங்கத்தின் 8 ஆண்டு கால வேதனைகளை விளக்கி பேசினார்.
         துணை பொது செயலர் தோழர் மதி சுமார் 2 மணி நேரம் எழுச்சியுரை ஆற்றினார். NFTE சங்கம் முதன்மை அங்கீகார சங்கமாக வருவது உறுதி என்றும், இழந்த போனஸை மீட்டெடுப்பது உறுதி என்றும் பலத்த கரவொலியிடையெ உச்சாகமாய் அறிவித்தார். BSNLEU சங்கத்தின்  8 ஆண்டு கால துரோகங்களை, மறந்துபோன வாக்குறுதிகளை , கூட்டணி என்ற பெயரில் அமைச்சர்களோடு கூடி குலாவிய அவலத்தை மற்றும் NFTE சங்கத்தின் நீண்ட கால சாதனைகளை எடுத்துரைத்து மிக சிறந்த எழுச்சியுரையாற்றினார். 
          நிறைவாக தோழர் G ராமச்சந்திரன் நன்றி கூற, ஊழியர் மத்தயில் உச்சாகத்தையும் நம்பிக்கையையும்  ஏற்படுத்திய சிறந்த கூட்டமாக அமைந்தது. திருச்சி மாவட்டத்தில் NFTE -ன் வெற்றிக்கு கட்டியம் கூறும் கூட்டமாகவும் அமைந்தது.

கூட்ட நிகழ்வுகள் பற்றிய தினத்தந்தி நாளிதளின் பதிவுகள் கீழே...

மத்திய அரசின் தனியார் மய கொள்கைகளினால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர் கூறினார்.
பிரசார கூட்டம்
தொலை தொடர்பு துறையில் பணியாற்றும் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கான தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வருகிற 16–ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான பிரசார கூட்டம் திருச்சி பி.எஸ்.என்.எல் முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. என்.எப்.டி.. தொழிற்சங்க மாவட்ட தலைவர் சுந்தரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் என்.எப்.டி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் மதிவாணன் பேசியதாவது:–

வருவாய் இழப்பு
கடந்த 2006–ம் ஆண்டு வரை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை நிரந்தரமாக வருவாய் பெற்று வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வருவாய் குறைந்து வருவாய் இழப்பு பெருகி போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய அரசின் தாராள மய மற்றும் தனியார் மய கொள்கைகளும், தனியார் ஆதரவு போக்கும் தான் காரணம் ஆகும்.
அப்போது அங்கீகாரம் பெற்று இருந்த தொழிற்சங்கங்களும் இதனை கண்டித்து கடுமையாக போராடவில்லை. இதனால் பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்குவது பாதிக்கப்பட்டதோடு ஊழியர்களின் சலுகைகளும் பறிபோய்விட்டன. எனவே இழந்த சலுகைகளை மீண்டும் பெறவும், கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட போனஸ் திரும்ப கிடைக்கவும் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உரிமை பெற வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் மனோகரன், துணை செயலாளர் சுந்தரம், எஸ்.என்..டி.டி. மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோரும் பேசினார்கள். முடிவில் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments: