Friday, April 26, 2013

அங்கீகாரம் உத்தரவு வெளியானது!

நமது  சங்க அங்கீகாரத்திற்கான உத்தரவும், சலுகைகள் குறித்த உத்தரவும் வெளியாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாம் அங்கீகாரம் பெற்றுள்ளோம்! இது 25-04-2013 முதல் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும்.

 NFTE  மற்றும் BSNLEU ஆகிய இரு சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட  தொழிற்சங்க வசதிகள் இரண்டு சங்கங்களுக்கும் பொருந்தும்.
  • தகவல் பலகை 
  • தொலைபேசி வசதி 
  • சங்கப்பொறுப்பாளர்களுக்கான  மாற்றல் (Immunity Transfer )
  • கூட்டாலோசனைக்குழுவில் பிரதிநிதித்துவம் - JCM 
  • முறைப்படுத்தப்பட்ட  கூட்டங்கள்  Formal Meetings 
  • சிறப்பு சிறு விடுப்பு - SPECIAL CASUAL LEAVE
  • சந்தாப்பிடித்தம் 
  • நிர்வாக உத்திரவுகளின் நகல்களை அளித்தல்


2 சதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற FNTO  மற்றும் BTEU  BSNL சங்கங்களுக்கு கீழ்க்கண்ட குறைந்த பட்ச தொழிற்சங்க வசதிகள் அளிக்கப்படும் எனவும் BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
1.  தகவல் பலகை
2. தொலைபேசி வசதி
3. சந்தாப்பிடித்தம்
4. நிர்வாக நலன் சம்பந்தமாக கடிதம் கொடுத்தல். 

JCM உறுப்பினர் எண்ணிக்கையைத்தவிர NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு இடையே தொழிற்சங்க வசதிகளில் வித்தியாசமில்லை. ஆயினும் JCM  ல் NFTE  மற்றும் BSNLEU  சங்கங்களுக்கு எத்தனை இடம் ஒதுக்கப்படுகின்றது என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

No comments: