Friday, August 23, 2013

BSNL அதிகாரிகள் சங்க வரைவு அங்கீகார  விதிகள், 2013 

அதிகாரிகளைப் பொறுத்தவரை  சங்கம் என்ற பதத்தை பயன்படுத்தக்கூட நிர்வாகம் ஏற்பதில்லை. அஸோசியேஷன் என்றே   அழைக்கப்படுகிறது.
  1. தேர்தலில் பங்கேற்க விரும்பும் சங்கம் ரெஜிஃட்ரார் ஆஃப் சொஸைட்டியிடம்,    ஒரு அஸோசியேஷணாக பதிவு செய்திருக்க வேண்டும்
  2. சம்பளத்தில் சந்தா பிடித்தம் அடிப்படையில், ( ரகசிய வாக்கு அடிப்படையில்      கிடையாது ) குறைந்தபட்சம்  35 சத அதிகாரிகளின் ஆதரவு பெற்ற ஒரே   சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
  3. அடுத்து குறைந்த பட்சம் 15 சத ஆதரவு பெற்ற சங்கத்திற்கு support Association  என்ற அந்தஸ்து    வழங்கப்படும். அந்த சங்கத்துடன் கண்டிப்பாக பேச வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது  
  4. பணியில் உள்ளோர் மட்டுமே சங்க உறுப்பினர்களாகவோ, சங்க     நிர்வாகிகளாகவோ இருக்க முடியும்.

No comments: