Saturday, April 12, 2014

எழுச்சி மிகு RGB தேர்தல் பிரசார கூட்டம்!

சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சார கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் 11-04-2014 அன்று பிற்பகல் 01:30 மணி அளவில் திருச்சி PGM அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டம் முழுதும் இருந்து 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

NFTE திருச்சி மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர் S.சுந்தரவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணை செயலர் தோழர் பாலகுரு வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் வேட்பாளர்களை அறிமுகபடுத்தி துவக்கவுரையாற்றினார்.அகில இந்திய துணை பொதுச்செயலர் தோழர் CK மதிவாணன், அவர்கள், கடந்த 4 ½ ஆண்டுகள் கூட்டுறவு சங்கம் BSNLEU சங்கத்தின் கட்டுபாட்டில் இருந்த போது BSNL ஊழியர்கள் அனுபவித்த இன்னல்கள், வட்டி கொடுமை, முறைகேடான நிர்வாகம், நிலத்தினை பாதுகாக்க நடத்திய முயற்சிகள், போராட்டங்கள் நிலத்தினை பிரித்துக் கொடுக்காமல் ஏமாற்றி, BSNLEU நடத்திய நாடகம், இன்றைய தீர்வு, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டினால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் விரிவாக விளக்கினார்.அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் தோழர் நாகராஜன் அவர்கள் தான் RGB ஆக இருந்த காலத்தில் BSNLEU சங்கம் செய்த ஏமாற்று வேலைகள், அவர்கள் ஏன் தோற்கடிக்க படவேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கினார்.AIBSNLOA சங்கத்தின் மாநில துணை தலைவர் தோழர்.பொன்னுசாமி அவர்கள் வட்டி குறைபிற்கான அவசியத்தை விளக்கினார்.முன்னாள் மாவட்ட செயலர் தோழர். செல்வராஜ் அவர்கள் தனது RGB அனுபவங்கள், இன்றைய சூழலில் NFTE வெற்றி பெறவேண்டிய அவசியம் பற்றி பேசினார்.மூத்த தோழர். G.இராமச்சந்திரன் அவர்கள் NFTE கூட்டணியின் 12 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என்ற உறுதிபாட்டுடன் நன்றி கூறினார்.

கூட்ட பதிவுகள் சில. . .














========================================================================

NFTE கூட்டணியின் வெற்றிக்கு உரமேற்றிய மாவட்டம் தழுவிய பிரசார பயணங்கள்!

கடந்த 15 நாட்களாக திருச்சி தொலைத்தொடர்பு மாவட்டம் முழுதும் கூட்டுறவு சங்க RGB தேர்தலுக்காக தீவிர பிரசார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. 
புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி, முசிறி, குளித்தலை, மணப்பாறை, அரியலூர், ஜெயங்கொண்டம், துறையூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திருச்சி புறநகர் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அலுவலகங்கள், தொலைபேசி நிலையங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது
புதுக்கோட்டை, முசிறி, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில் பெருமளவில் ஊழியர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 
புதுக்கோட்டை கூட்ட பதிவுகள். . .







கரூர் கூட்ட பதிவுகள். . .










No comments: