Sunday, August 16, 2015

சிறப்பான, வெற்றிகரமான, ஒற்றுமையான மாநாடு!

     திருச்சி தொலைத் தொடர்பு மாவட்டத்தின் 6 வது மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் 13-08-2015 அன்று வெகு சிறப்பாக நடந்தது. 
   காலை 09:30 மணி அளவில் புதுக்கோட்டை தொலைபேசி நிலையத்தில் புதுக்கோட்டை கிளையின் மூத்த தோழர் வைரவன் சங்க கொடியேற்ற, பேண்டு வாத்தியங்கள் முழங்க பட்டாசுகள் வெடிக்க, கொள்கை கோசங்களுடன் ஊர்வலமாக புறப்பட மாநாட்டு நிகழ்வுகள் உற்சாகமாக தொடங்கின.


     மாநாட்டு நிகழ்விடமான தோழர் சுந்தரவேல் நினைவரங்கத்தில் தேசிய கொடியை மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் திரு.S நடராஜன் அவர்கள், ஏற்றிவைக்க, நமது சங்க கொடியை தோழியர் அழகம்மாள் அவர்கள் ஏற்றிவைத்தார்.


    10:00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர். ஆசைதம்பி அவர்கள் தலைமையில் மாநாடு துவங்கியது. மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள், தோழமை சங்க நிர்வாகிகள், மாநாட்டு சார்பாளர்கள், நண்பர்கள் அனைவரையும் மாவட்ட செயலர் தோழர்.S பழனியப்பன் வரவேற்று பேசினார். தோழர். M  பாலகுரு, அவர்கள் அஞ்சலியுரை ஆற்றினார். மாநாட்டில் சுமார் 450 தோழர்கள் பங்கேற்றனர்.      
     மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் திரு. S நடராஜன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
    மாநிலச் செயலர் தோழர். பட்டாபிராமன் அவர்கள் முக்கிய சங்க பணி காரணமாக டெல்லி சென்றதால் அவர் சார்பில் மாநில துணை செயலர் தோழர். ராபர்ட் அவர்கள் மாநாட்டை துவங்கிவைத்தார். 

BSNL நிலை, Tower கம்பெனி உருவாக்கம், BB பராமரிப்பு தனியார்மயம், 6 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது திட்டம் ஆகியவை குறித்து உரையாற்றி துவங்கிவைத்தார். 
    "BSNL வருவாய் மேம்பாட்டில் ஊழியர் பங்கு" என்ற சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 



முதன்மை பொது மேலாளர் திரு. V .ராஜு அவர்கள் கலந்துகொண்டு சிறந்த கருத்துக்களை வழங்கினார். துணை பொது மேலாளர், நிர்வாகம் திரு. Rகிருஷ்ணன்,  புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் திரு. ராஜேந்திரன், ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினர்.
     BSNLEU மாவட்ட செயலர் தோழர். அஸ்லம் பாஷா, AIBSNLOA மாவட்ட செயலர் தோழர். காமராஜ் , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர். மோகன் TEPU மாவட்ட செயலர் தோழர். ரவீந்திரன், SNEA மாவட்ட துணை செயலர் தோழர்.ராஜகோபால், SEWA BSNL மாவட்ட செயலர் தோழர். கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கில் பேசினர். 

       முன்னாள் அகிலஇந்திய துணை பொது செயலர் மற்றும் சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர். CK மதிவாணன் சிறப்புரை ஆற்றினார்.  ஏப்ரல் 21,22 வேலை நிறுத்தம், அதன் தாக்கம், ஜூன் 1 பேச்சுவார்த்தை, BSNL  நிறுவனத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள், 6 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது கடமைகள் ஆகியவைகள் குறித்து மிக சிறப்பாக பேசினார். மாநாட்டின் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்றாக அவரது பேச்சு அமைந்தது.

     மாநில பொருளர் தோழர். K அசோகராஜன் மாநாட்டை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். மாநில துணை செயலர்கள் தோழர். L சுபராயன், தோழர்.P சுந்தரம், தோழர். K நடராஜன், மாநில அமைப்பு செயலர் தோழர். V மாரி, மாநில துணை தலைவர் தோழர். S மனோகரன், மாநில அமைப்பு செயலர் தோழர். அன்பழகன், NFTCL மாநில செயலர் தோழர். ஆனந்தன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர். மில்டன், சென்னை தொலைபேசி மாநில அமைப்பு செயலர் தோழர். G பழனியப்பன், CPI  கட்சியின் நகர செயலர் தோழர். ராமசந்திரன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர். திருநாவுகரசு ஆகியோர் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.     

     சம்மேளன செயலர் தோழர். கோவி. ஜெயராமன் அவர்கள் மாநாட்டு நிறைவுரையாற்றினார். அகில இந்திய, மாநிலசங்க செயல்பாடுகள், BSNL நிலை, நமது கடமைகள், தேர்தல் திட்டம் ஆகியவை குறித்து தனது அழகு தமிழால் உரை நிகழ்த்தினார்.         
     மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை மாநில பொருளர் தோழர். அசோகராஜன் நடத்தினார். 
     புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 
     நிறைவாக மாவட்ட பொருளர் தோழர். ஆறுமுகம், நன்றி கூற மாநாடு சிறப்பான, வெற்றிகரமான, ஒற்றுமையான மாநாடாக நிறைவுபெற்றது.


புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள்!

தலைவர்:                   தோழர்.P சுந்தரம், TM, KRU,

துணை தலைவர்கள்:  தோழர். K.ஆசைத்தம்பி TM, PDK,
                                                 தோழர். V.சுப்ரமணியன், TM, TR,
                                                 தோழர். S. ஜவகர், TM, MSRI,
                                                 தோழர். M.பாலகிருஷ்ணன், SSS(O), TR,

செயலர்:                     தோழர். S பழனியப்பன், STS (O), TR,

துணை செயலர்கள்:    தோழர். M.பாலகுரு, TTA, TR,
                                                 தோழர். S.நாகராஜன், STS (O), PMV,
                                                 தோழர். Y. மில்டன், TTA, TR,
                                                 தோழர். M, மாதவன், TM, ATG,

பொருளர்:                 தோழர். G. ஆண்டிச்சாமி TTA, TR 

அமைப்பு செயலர்கள்: தோழர். S லோகநாதன், TSO, KRU,
                                                  தோழர். M மாரிமுத்து, TTA , AYL 
                                                  தோழர். அமல்ராஜ், TM, ATG
                                                   தோழர். R சண்முகம், TTA, JYK 

No comments: