Tuesday, January 5, 2016

நினைவை போற்றுவோம் ! 
அவர் வழி நடப்போம் !!





ஜனவரி 6 தபால்,தந்தி,தொலைபேசி சங்கங்களின் தன்னிகரற்ற தலைவன் தோழர்.OP.குப்தா அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் :- 1922ல் ஒன்று பட்ட இந்தியாவில் லாகூரில் பிறந்து ராணுவ விமானப் படையில் பணியாற்றினார். விடுதலைப் போராட்டத்தில பங்கேற்றதற்காக பணி நீக்கம் செய்யப் பட்டார். பின்னர் AITUC தலைமை தபால் தந்தியில் தொழிற்சங்கம் கட்டும் பொறுப்பினை இவரிடம் பணித்தது. பிரிந்து கிடந்த சங்கங்களை ஒன்றினைத்து 1949ல் வேலை நிறுத்த அறிவிப்பினை கொடுத்தார்.கைது செய்யப் பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.40 ஆண்டிற்கும் மேலாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர் நிரந்தரம்,கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கும் மூன்றாம் பிரிவு ஊழியர் பணி,பட்டப் படிப்பு இல்லையெனினும் அதிகாரிகள் பணி,கார்ப்பரேஷன் ஆன பின்னும் மத்திய அரசின் ஓய்வூதியம் போன்ற சரித்திர சாதனைகள் படைத்தவர்.இவர் காலத்தில் உடன்பாடில்லாத போராட்டம் இல்லை.அமுல் படுத்தாத உடன்பாடில்லை.மொத்தத்தில் இவர் தபால் தந்தி தொலைபேசி ஊழியர்களின் " பிதாமகன் ".

No comments: