Thursday, April 21, 2016

கீரனூர் செயற்குழு முடிவுகள்.


       05-04-2016 அன்று நமது மாவட்ட தேர்தல் சிறப்பு செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் P சுந்தரம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். ஹென்றி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலர் தோழர். பாலகுரு அஞ்சலிவுரை ஆற்றினார். 
     மாநில சங்க அமைப்பு செயலர் தோழர். V மாரி அவர்கள் செயற்குழுவை துவங்கி வைத்தார். அவர் தனது உரையில் NFTE சங்கம் சாதித்தவை,  கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்படுத்திய முன்னேற்றங்கள், BSNLEU சங்கத்தின் இயலாமைகள், ஊழியர்களுக்கு இழைத்த  துரோகம்,  NFTE சங்கம் முதன்மை அங்கீகார சங்கமாக வரவேண்டிய அவசியம், நம்முன் உள்ள கடமைகள் ஆகியவற்றை தெளிவாக, எளிமையாக, நகைசுவை உணர்வுடன் தனக்கே உரிய பாணியில் எடுத்துரைத்து துவக்கிவைத்தார். 
     நமது மாவட்டத்தில் செய்யவேண்டிய தேர்தல் வேலைகள், கூட்டங்கள், பிரசார முறை, தேர்தல் நிதி உள்ளிட்ட நிகழ்ச்சி நிரலை மாவட்ட செயலர் அறிமுகபடுத்தினார். 17 கிளை செயலர்களும், 16 மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் விவாதத்தில் பங்கேற்றனர். 
    அரியலூர், ஜெயந்கொண்டம் கிளைகள் சார்பாக மூன்று போஸ்டர்கள் வெளிடப்பட்டது. 
     நிறைவாக கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.

1. குறுகிய கால அறிவிப்பில் மாவட்ட செயற்குழுவை சிறப்பாக நடத்திட உதவிட்ட கீரனூர் கிளைக்கு பாராட்டுகள்.
2. உரிய காலத்தில் போஸ்டர்களை விநியோகித்த அரியலூர், ஜெயந்கொண்டம் கிளைக்கு பாராட்டுகள்.
3 தேர்தல் நன்கொடையாக உறுப்பினர் அனைவரிடமும் ரூ.100 வசூலிப்பது. அதில் ரூ. 75 மாவட்டதிக்கும், ரூ. 25 கிளைக்கும் அளிப்பது.

4 தேர்தல் பணிகுழுக்கள் 
     மாவட்ட பணிக்குழு. : தோழர்கள் சுந்தரம், பழனியப்பன், ஆண்டிசாமி, மனோகரன், பாலகுரு, சேதுபதி, மில்டன், மாரிமுத்து, ஆசைதம்பி, நாகராஜன், ஆறுமுகம்.
     திருச்சி பணிகுழு.: தோழர்கள் பாலகுரு, சுப்ரமணியன், பாலகிருஷ்ணன், மில்டன், பன்னீர், கண்ணன், பாலு,  முருகானந்தம், பாலன், ஜெயகோபால், அர்ஜுனன் உள்ளிட்டோர். ஒருங்கிணைப்பாளர். பாலகுரு.
புதுக்கோட்டை பணிகுழு: தோழர்கள்: ஆசைதம்பி, மாதவன், நாகராஜன், அமல்ராஜ், ஹென்றி, ராஜேந்திரன், முருகப்பன், இளங்கோ உள்ளிட்டோர். ஒருங்கிணைப்பாளர்: ஆசைதம்பி.
கரூர் பணிகுழு: தோழர்கள் ஆறுமுகம், ராமநாதன், ஞானவேல், ஜெகதீசன் உள்ளிட்டோர், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம்.
அரியலூர் பணிகுழு: மாரிமுத்து, சண்முகம், பெரியசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர், ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து.
பெரம்பலூர் பணிகுழு: செல்வராஜ், ஜோசப், சந்திரசேகரன் உள்ளிட்டோர், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்.  
மேலும் புகைப்பட பதிவுகள் இங்கே சொடுக்கவும்.

No comments: