எங்கள் உயிர் சங்கம் NFTE BSNL
அத்துக்கூலி என்று சொல்லி
அவமானம் செய்தவரை
ஓரங்கட்டி துரத்தியே
ஒதுக்கிய சங்கம் NFTE
அதிகாரியின் வால் பிடித்து
அற்பனுக்கெல்லாம் காசு அழுது
வேலை பெற்ற கொடுமையினை
வேரறுத்த NFTE
நிரந்தரங்கள் என்பதெல்லாம் 
நிச்சயமாய் கனவு தான்
என்று சொன்ன வீணருக்கும்
வாழ்வு தந்தது NFTE
நன்றி கெட்ட மனிதருக்கும்
நலமே செய்தது NFTE
நான்காம் பிரிவு ஊழியரை
மூன்றாம் பிரிவு ஊழியராக்கி
அதிகாரியாய் மேலும உயர்த்தி
அழகு பார்த்த NFTE
ஓய்வு பெற்ற ஊழியரின
ஒவ்வொரு பிடி சோற்றுக்குள்ளும்
உப்பு போல கரைந்திருக்கும் 
O P குப்தா பென்சன் திட்டம் 
இன்றும் எங்கள் வாழ்விலே
இனிமை சேர்த்த சங்கத்தை
நன்றியோடு தெய்வமாக 
நாளும் நாளும் வணங்குவோம்
வாக்களிப்பீர் NFTE
* * *
NFTE சங்கத்தால் வாழ்வு பெற்று
பணி நிறைவு செய்த
NFTE தோழர்கள் 
கவிதையாக்கம்: தோழர். விமலாதித்தன், கரூர், 9486103627

No comments:
Post a Comment