Sunday, April 24, 2016

வாகை சூட வாக்களிப்போம்!

கானல் நீராகிக்  
கசந்த காலம் - அந்தக் 
கடந்த காலமது 
கரைந்தே போயிட !
வருங்காலமது - நமக்கு 
வசந்த காலமாய் வந்திட!
வாக்களிப்போம்! வாக்களிப்போம் !!
வலிமையான NFTE 
வாகை சூட வாக்களிப்போம்!

ஊதிய மாற்றத்தை ...
ஜனவரி 2017 முதல் 
ஊதிய மாற்றத்தை 
உருவாக்கி தந்திடவே!
உருப்படியாய் நமக்கென்றும் - அது 
உகந்ததாய் இருந்திடவே!
வாக்களிப்போம்! வாக்களிப்போம் !!
வலிமையான NFTE 
வாகை சூட வாக்களிப்போம்!

தேக்கநிலை ஊதியத்தை 
ஏக்கமுள்ள ஊழியரும் 
ஊக்கமுடன் பெற்றிடவே !
ஆக்க வழியனைத்தும் 
அறிந்து செய்வோம்! அறிந்து செய்வோம்!! 
வலிமையான NFTE 
வாகை சூட வாக்களிப்போம்!

நேற்று. . .
இழந்த உரிமைகள் - மீண்டும் 
நிலைக்குத்  திரும்பிட !
இன்று. . .
இருக்கும் உரிமைகள் 
என்றென்றும் தொடர்ந்திட !
நாளை. . .
வரும் நாளை - நம் 
வசமாக்கித்  தந்திட !
வாக்களிப்போம்! வாக்களிப்போம் !!
வலிமையான NFTE 
வாகை சூட வாக்களிப்போம்!

# # #

கவிதையாக்கம்: தோழர். S நாகராஜன் மாவட்ட துணை செயலர். 

No comments: