Tuesday, March 2, 2010

சாம் பெட்ரோடா  கமிட்டி  என்ன தான் பரிந்துரைத்ததுள்ளது ? தினம் தினம் ஒரு செய்தி வருகிறது!
  • ஒய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்பட உள்ளதாம்!
  • ஒரு லட்சம் பேரை வெளியேற்ற போகிறார்களாம்!
  • செல்பேசி விரிவாக்கத்திற்கு டெண்டர் வேண்டாம் ! தனியார் நிறுவனங்களை போல நிறுவல் மற்றும் பராமரிப்பு பணிகளை வெளியாருக்கு (அவுட் சோர்சிங்) விட்டுவிடலாம்!
  • BSNL நிறுவனத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கலாம்!
  • BSNL நிறுவனத்தில் தனியார் நிபுணர்களை பணியமர்த்தலாம்!                                            இப்படி நாள் தோறும் ஒரு செய்தி பரப்ப படுகிறது! 
ஆனால் நமது CMD திரு குல்திப் கோயல் அவர்கள் "சாம் பெட்ரோடா  கமிட்டி என்ன பரிந்துரைத்ததுள்ளது என எனக்கு தெரியாது " என்கிறார்!
 ஏற்கனவே BCG குருப் பரிந்துரைஅடிப்படையில் விஜய் , உதான் , சஞ்சய் , சிகார் என பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ள நிலையில் இப்போது சாம் பெட்ரோடா  கமிட்டி என புதிய குழப்பம்!
"அரசு என்பது எந்த வியாபாரமும் செய்யகூடாது! எல்லாவற்றையும் தனியார் மயமாக்கவேண்டும்!!" என்ற உயர்ந்த (!) நோக்கமுடைய சாம் பெட்ரோடா போன்ற அமெரிக்க பாணி சிந்தனையாளர் பரிந்துரை BSNL நிறுவனத்தை சீராக்க போகிறதா? அல்லது சீரழிக்க போகிறதா?

No comments: