Tuesday, April 20, 2010


 வேலை நிறுத்தம் விலக்கிகொள்ளப்பட்டது !
20 -04 -2010 காலை 06 .00 மணி முதல் தொடங்கிய நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் நமது அமைச்சர் மாண்புமிகு அ.ராசா, தொலைதொடர்புத்துறை செயலர் மற்றும் CMD  ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட கீழ்க்கண்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் விலக்கிகொள்ளப்பட்டது !
  • ITS அதிகாரிகள் BSNL-க்குள் வரும் பிரச்சனையில் காபினெட் குறிப்பு உடனடியாக தயாரிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் தீர்வு காணப்படும்.
  • பங்கு விற்பனை,VRS மற்றும் BSNL கட்டுமானங்களை தனியாருக்கு விடுவது ஆகியவற்றில் அரசு தனித்து முடிவெடுக்காது! தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து அதன் பிறகு முடிவுசெய்யப்படும்.
  • 93 மில்லியன் செல்பேசி டெண்டர் பிரச்சனையில் 20 மில்லியன் இணைப்புகளுக்கான வேலைகள் நடந்துவருகிறது. மேலும் 10 மில்லியன்  இணைப்புகளுக்கான கருவிகள் புதியடெண்டர் மூலம் வாங்கப்படும்.
  • IDA விகிதத்தில் ஓய்வூதிய மாற்றம்: காபினெட் குறிப்பு உடனடியாக தயாரிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் தீர்வு காணப்படும்.
  • ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 15 நாட்களுக்குள் DOT-ன் ஒப்புதல் பெறப்பட்டு விரைந்து உத்தரவிடப்படும். கூட்ட குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்.

No comments: