Thursday, December 29, 2011

NE-12 - கொண்டாட ஒன்றும் இல்லை!
 
          23 - 12 - 2011 அன்று BSNL நிர்வாகம் NE - 12 ( Rs 13390 ?! ) சம்பள விகிதத்தை ஏற்றுக்கொண்டு DOT ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. அது DOT ஒப்புதல் கிடைத்த பிறகு, உத்தரவிடும் தேதியில் இருந்து தான் கிடைக்குமாம்! 
         2004 -ல் இருந்து பல மூத்த தோழர்கள் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றத்துடன் ஒய்வு பெற்றுவிட்டனர். இபோழுதும் 2012 -ம் ஆண்டு முதல் தான் அமலாகும் வாய்ப்பு உள்ளத்தால், மிக சிலருக்கு மட்டும் தான் ஒரு இன்க்ரிமென்ட் அளவுக்கு பலன் கிடைக்கும். பழைய OTBP / BCR பதவி உயர்வு திட்டத்தில் கிடைத்த "ஒய்வுக்கு முன் ஓராண்டுக்கு வழங்கப்பட்ட ஒரு இன்க்ரிமென்ட்" என்பதும் தற்போது ரத்து செய்யபட்டுள்ள நிலையில், வரவுள்ள NE -12 -ல் கொண்டாட ஒன்றும் இல்லை!

No comments: