Thursday, September 20, 2012

கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத செயல்களான டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, காஸ் சிலிண்டர் வருடத்திற்கு 6 என்ற கட்டுப்பாடு, பொது துறை பங்கு விற்பனை ஆகியவற்றை கண்டித்தும் அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் BSNL ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் திருச்சி PGM அலுவலக வாயிலில் எழுச்சியுடன் நடைபெட்ட்றது. NFTE மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல்,  BSNLEU மாவட்ட பொறுப்பாளர் தோழர் ருக்குமாங்கதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்வில் சுமார் 150 தோழர்கள் கலந்துகொண்டனர். போராட்ட கோரிக்கைகளை விளக்கி NFTE மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன், AIBSNLOA மாநில துணை செயலர் தோழர் காமராஜ், FNTO மாவட்ட செயலர் தோழர் ராவநேஸ்வர சாஸ்திரி, BSNLEU மாவட்ட செயலர் தோழர் அஸ்லாம் பாட்சா, BSNL SEWA மாவட்ட செயலர் தோழர் கருப்பையா AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் குணசேகரன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை செயலர் பாலகுரு எழுச்சி முழக்கங்கள் எழுப்பி நன்றியுரையும் ஆற்றினார். மாவட்ட துணை செயலர்கள் பாலகுரு, அறிவழகன், மில்டன், மாவட்ட பொருளர் தோழர் ஆறுமுகம் PGM அலுவலக கிளை செயலர் தோழர் கேசவ பிரசாத் ஆகியோர் ஆர்பாட்ட நிகழ்விற்கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments: