Sunday, April 14, 2013

சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. அவனால் இயற்றவும் முடியாது என்பதே உண்மை. மனுவிற்கு நெடுநாட்களுக்கு முன்பிருந்தே சாதி நின்று நிலவியது. அவன் சாதியை உயர்த்திப் பிடிப்பவனாக இருந்தான். எனவே அவன் சாதியைத் தத்துவத் தன்மை கொண்டதாக ஆக்கினான். ஆனால் மிக நிச்சயமாக அவன் இந்துச் சமுகத்தின் இன்றைய நிலையை ஏற்படுத்தவும் இல்லை. அவனால் ஏற்படுத்தவும் இயலாது. எந்த ஒரு தனி மனிதனின் எந்திரத்தாலோ சக்தியாலோ சாதிக்கப்பட்ட முடியாது. பிராமணரா்கள் சாதியை உண்டாக்கினார்கள் என்னும் கோட்பாடு எண்ணத்தில் தவறானது. நோக்கத்தில் வன்மம் கொண்டதாகும் என்பதைத் தவிர நான் வேறெதுவும் சொல்லத் தேவையே இல்லை. சாதி முறைமைப்பாட்டைத் திணிக்க அவர்கள் தங்கள் சொல்வளங் கொண்ட தத்துவங்களின் மூலம் துணைபோயிருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவர்களால் தங்களுடைய திட்டத்தை தங்கள்  வரைமுறைகளுக்கு அப்பால் உந்தித்தள்ளியிருக்க முடியாது.

No comments: