Monday, May 27, 2013


பொதுத்துறைக்கான நாடாளுமன்றக் குழு நமது இலாகாவைப்பற்றி அரசுக்கு அனுப்பிய குறிப்புகளின் விபரம்:
  
   பி.எஸ்.என்.எல். குறித்து நாடாளுமன்ற குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி இறுதியாக தனது கண்டுபிடிப்புகளை அரசுக்கு சமர்பித்துள்ளது.அதன் தலைவர் திரு.ஜகதாம்பிகா பால் 29 ஏப்ரல் அன்று புதுடெல்லியில் இதனை சமர்ப்பித்தார். அதன் தமிழாக்கத்தை உங்களுக்கு தருகிறோம்:

     BSNL கடந்த சில ஆண்டுகளாக மோசமான செயல்பாட்டில் உள்ளது கண்டு கமிட்டி அதிருப்தி அடைகிறது. நிர்வாகத் திறமின்மையும், அதற்கு அப்பாற்பட்ட சில காரணங்களாலும் BSNL படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. 2004-05 ல் 10,181 கோடி லாபம் ஈட்டிய நிறுவனம்2009-10 முதல் நஷ்டத்தில் போகத் தொடங்கியது. 2009-10ல் 1,823 கோடி, 2010-11-ல் 6384 கோடி, 2011-12-ல் 8851 கோடி என நஷ்டம் அடைந்துள்ளது.
     இத்தகைய மோசமான செயல்பாட்டிற்கு 38,053 கோடி 2007-08ல் வருவாயாக இருந்தது 27,934 கோடியாக குறைந்ததே காரணம் என தெரிகிறது.இதற்கு இன்னும் சில காரணங்களும் உண்டு. கம்பெனி செலவு 33,636 கோடி 2007-08ல் இருந்தது 2011-12ல் 36,586 ஆக உயர்ந்துவிட்டது. ஊதிய உயர்வு, அரசின் பங்களிப்பு குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரித்து விட்டது. அதேபோல விரிவாக்க தாமதம், டெண்டர்கள் ரத்து போன்றவை செயல்பாட்டை கடுமையாக பாதித்தன. BSNL நலிவுற்றத்தற்கு முக்கிய காரணமே அரசின் அலட்சியபோக்கே என்று கமிட்டி கருதுகிறது.
     தற்போதுதான் சிறிது நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்படுகிறது. அரசு திட்டங்கள் மூலம் BSNL வருவாயை பெருக்குவது, பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பை பெருக்குவது, அசையா சொத்துக்களை பயன்படுத்துவது போன்றவை அவற்றில் சில. டெலிகாம் செயலரை இதுகுறித்துக் கேட்டால் அதற்கு இன்னும் 3 ஆண்டுகள் வேண்டும் என்கிறார். போர்கால நடவடிக்கைகள் போல உடனே அரசும், DOT-யும் செய்திட வேண்டும்.
     BSNLன் சந்தை பங்கு வீழ்ச்சி (Market share down) காரணம் அதன் சேவை குறைபாடுதான் காரணம் என நம்புகிறோம். ஆகவே வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி அவர்கள் நம்பிக்கையை முதலில் பெறவேண்டும். லேண்ட்லைன் சேவையை முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும். ஒயர்லெஸ் பகுதியில் வீழ்ச்சிக்கு சில காரணங்கள் உள்ளன. 93 மில்லியன் டெண்டர் ரத்து ஆனது, (திரும்ப திரும்ப..) BSNL-ஆல்  GSM கருவிகளை வாங்கமுடியாததும் காரணம் ஆகும். BSNL கருவிகளை காலத்தே வாங்கிட DOT வழிவகை செய்திட வேண்டும்.
     சமீபத்தில் கொள்முதலுக்கு முடிவான டெண்டர் விரைவாக முடிக்கப்படவேண்டும். சந்தாதாரர்கள் கேட்கும் ஆனால் லாபம் தாராத சேவைகளை மட்டுமே BSNL தருகிறது. இதற்கு ADC, USO FUND மூலம் ஈடுகிடைக்கிறது. நஷ்ட சேவைகளை தரும் BSNL-க்கு போட்டி என்பது சமதளத்தில் இல்லை.
     BSNL நிலம் மற்றும் சொத்துக்களை பயனுள்ளதாக மாற்ற 3 வருடம் முன்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை எப்படி பயன்படுத்தியுள்ளது என்ற விபரம் கமிட்டிக்கு தரப்பட வேண்டும்..
     பிட்ரோடா கமிட்டி சில பரிந்துரைகளை செய்துள்ளது. அது பற்றி BSNL உடனே நடவடிக்கை எடுத்து எங்களுக்கு அனுப்பிட வேண்டும். BSNL ஊழியர் எண்ணிக்கை 3.97 லட்சமாக 2000-ல் இருந்தது தற்போது 2.58 லட்சமாக குறைந்துள்ளது. பிர்ரோடா கமிட்டி ஊழியர் சம்பளம் மட்டும் 500 கோடி ஆகிறது குறைந்தபட்சம் 1 லட்சம் பேரை விருப்ப ஓய்வில் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது. வருவாயில் ஊழியர் செலவு 50 சதவீதம் என்பது தனியாரை ஒப்பிடும்போது (5 முதல் 10 சதம்வரை) இது மிகமிக அதிகம்.  BSNL அரசிடம் இதற்காக 10,000 கோடி வேண்டும் என கேட்டுள்ளது. BSNL-லின் இந்த கோரிக்கையை அரசு உடனே கவனித்து ஆவன செய்யவேண்டும். எந்த இடத்தில் அதிக ஊழியர் உள்ளனரோ அவர்களை குறைந்த ஊழியர் உள்ள இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்க வேண்டும் என இக்கமிட்டி கருதுகிறது.  எட்டு வருடமாகியும் ITS பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இனியும் தாமதமில்லாமல் இந்த பிரச்சனையை முடிக்கவேண்டும். அதிக நாட்கள் டெபுடேஷனில் இருப்பது கம்பெனி நலனுக்கு உகந்ததல்ல என்பது எங்கள் கருத்து. கம்பெனி இதற்காக தனது சொந்த கேடர்களை உருவாக்க வேண்டும்.
     பிராட்பேண்ட் சேவை விரிவாக்கத்திற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. செப்.2012 வரை 28.5 சதவீத கிராமங்கள் இந்த சேவையை பெற்றுள்ளன. இதற்கு சரியான வியாபர உத்திகளை BSNL உருவாக்கிட வேண்டும். ஊரக கட்டுமான வாய்ப்புகளை பயன்படுத்தி பிராட்பேண்டு சேவையை விரிவாக்கம் செய்தால் நிச்சயமாக வருவாய் உயர வாய்ப்பு இருக்கிறது.
     BSNL பெரும்பாலான ஊழியர் திறமை இன்றுள்ள தேவைக்கு பொருத்தமானதாக இல்லை. திறமை வளர்ச்சிக்கு பயிற்சிகள் கொடுக்கப்படுவதாக அறிகிறோம். இருந்தாலும் கூடுதலான திட்டங்கள், தொடர்ந்து நவீன டெலிகாம் இன்றைய தேவை ஆகிறது.
     மிக விரைவாக மாறும் தொலைத்தொடர்பு மார்கெட்டை கணக்கில் கொண்டு 3ஜி போன்ற சேவைகளுக்கு புதிய திறமையானவர்களை அப்பகுதியில் நியமிக்க வேண்டும். காலியடங்களை இதற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
     பிட்ரோடா கமிட்டி முடிவுகள் அமுலாக்கம் குறித்த விவரங்களை உடனே எங்களுக்கு தரவேண்டும். BCG பரிந்துரைகளை ஏற்று BSNL-ஐ நான்கு வர்த்தக பிரிவாக மாற்றியதால் ஏற்பட்ட விளைவுகளை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.
     BSNL-க்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. OFC அபரிமதமாக உள்ளது. எனவே அரசு சரியான விரைவான முடிவை உருவாக்கி உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அதேபோல இந்த சூழலில் ஸ்பெக்ட்ரம் திரும்ப ஒப்படைப்பு என்ற BSNL முடிவையும் பரிசீலிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
(செய்தி : கோவை இணைய தளம்)

No comments: