Friday, September 6, 2013

புதிய பென்சன் மசோதா என்ன செய்யும் ? -தெறிக்கும் மக்கள் கருத்துக்கள்!

  • கூட்டுக் குடும்பங்களின் சிதைவு,முதுமையை பாரமாக நினைக்கும் இளசுகளின் மனோபாவம்,போகிற வரைக்கும் அல்லாட வேண்டிய தனிமை ஆகியவை ஓரளவு ஓய்வு ஊதியத்தால் முறையாக பெருமளவு வாய்ப்புண்டு.பணியின் இறுதி நிலையில் கிடைக்கும் தொகை அனேகமாக பூனையின் கையில் கிடைத்த அப்பமாக கபளீகரம் செய்யப்படும்.முதுமையின் மாபெரும் ஊன்றுகோல் ஓய்வூதியம்...முதுமைக்காலத்தின் தலை எழுத்தை நன்றே எழுதும் மதிநுட்பத்தில் அமைய மன்றாடுவோம்
  • சம்பாதிப்பது ஊழியர்கள், சேமிப்பு பண முதலைகளுக்கு. ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் இருந்தாலும் பன்னநாட்டு-உள்நாட்டு பெரிய முதலாளிகள் அரசையும் சட்டத்தையும் தங்கள் இஷ்டம் போல வளைக்கும் போது, இந்த திட்டம் தேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சாதகமாக இருப்பது சந்தேகமே.

  • இது போன்ற திட்டம்தான் அமெரிக்காவில் 401K என்ற பெயரில் பல வருடங்களாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் விருப்புரிமை ஓய்வூதியதாரருக்கே கொடுத்துவிட்டதால், அதன் முழு பொறுப்பும் அவரையே சேரும். பங்கு சந்தையின் நெளிவு சுளிவு தெரியாவிட்டால், அவர் தெரிவு செய்யும் முதலீடுகள் மண்ணை கவ்வும். தெரியாததால், நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவுக்கு விட்டு, அவர்கள் பங்குசந்தையில் முதலீடு செய்து பணத்தை தொலைத்தாலும் கேட்கமுடியாது. அரசு தரும் பாதுகாப்பு அந்த நிறுவனம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட முடியாது என்ற வரையில் மட்டுமே. மோசமான முறையில் முதலீடு செய்து பணத்தை இலக்குமேயானால் அதற்க்கு அரசு பொறுப்பேற்காது. இங்கு 2008 பங்கு சந்தை வீழ்ச்சியில் மொத்த ஓய்வூதிய அசலை இழந்தவர்கள் பலர்! இது நல்ல முடிவென்று தோன்றவில்லை!


No comments: