Saturday, January 25, 2014

குடியரசு தினம்!

நாமும் சொல்லிவைப்போம் 
குடியரசு தின வாழ்த்துக்களை!

ஜனவரி 25 - வாக்காளர் தினம் !
ஜனவரி 26 - குடியரசு தினம்!
வரபோகுது இந்த ஆண்டு ஒரு தேர்தல் தினம்.

வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்கி
அரசியல்வாதி கொள்ளையர்களிடம் தந்துவிட்டோமா!

ஐந்தாண்டுக்கொருமுறை போடும் வாக்கால்
ஜெயிக்கும் கவுன்சிலர் முதல் முதல்வர், பிரதமர் வரை வரிப்பணத்தை “திட்டங்கள் ,நிவாரணங்கள் ” என்ற பேரால் பெருகிப்போன ஊழல் கொள்ளையடிக்கும் கூட்டம்.

ஓட்டு போட, சரக்கடிக்க வாங்கிய காசு
ரெண்டு நாளுக்கு வராது? என தெரிந்தும்
அடுத்த 1823 நாளுக்கு அரசுப் பணத்தை 
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் உரிமையை
அரசியல்பெயரில் சிலருக்கு அளிப்பது தான்
குடியரசா? ஜனநாயகமா?

இந்த கேடுகெட்ட ஜனநாயக படுகொலைக்கு,
மக்கள் வழங்கும் அங்கீகாரமே,
வருடந்தோறும்  நடத்தப்படும்
திருவிழா தான் குடியரசு தின விழாவா?

கடுமையான மின்வெட்டு,
வாங்க முடியாத விலைவாசி,
குண்டும் குழியுமாய் சாலைகள், 
தகர டப்பாக்களாய் பேருந்துகள்,
லட்சங்களில் பள்ளிக் கட்டணங்கள், மருத்துவ செலவுகள்?


சாலையோரம் படுத்துக் கிடப்பவனும்,கிராமத்தில் கூலி வேலை செய்பவனும்
கலர் கனவு காணும் நடுத்தர வர்க்கமும்,
ஊரை அடித்து உலையில் போடுபவனும்,
கோ டிகளில் அரசை ஆட்டுவிப்பனும்,

திடீரென ஒன்று என்றால்,
எல்லோரும் இந்நாட்டு மன்னன் என்றால்,

சிந்தித்ததுண்டா ?
ஒரு கணம் யோசி!

நாமும் சொல்லிவைப்போம் 
குடியரசு தின வாழ்த்துக்களை!



No comments: