Thursday, June 19, 2014

மத்திய அமைச்சரின்  நேரடி பார்வையில்
                 பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்!!
                                   
டெல்லி: இந்திய தொலைதொடர்பு துறையில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் செயல்பாடுகளை உக்குவிக்க மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேரடியாகவே கவனிக்க உள்ளார். இதற்காக, அந்த நிறுவனங்களின் டவர்கள் அனைத்தையும் இணைத்து ஒரு நெட்வொர்க் அமைப்பு அவருடைய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கனவே இந்தியாவில் குறைந்த விலையில் சிறப்பான சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு நிறுவனங்களும், இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை வசதிகளுக்கு அரசு உதவி "இந்த இரு சேவை நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது. அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கித் தருவது மத்திய அரசின் கடமை. அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments: