Saturday, March 26, 2016

எழுச்சிமிக்க பிரசார துவக்க விழா!

திருச்சி தொலைதொடர்பு மாவட்டத்தில் நமது NFTE கூட்டணி சார்பிலான தேர்தல் பிரசார துவக்க விழா 23-03-2016 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது.

NFTE மாவட்ட தலைவர் தோழர். P சுந்தரம் மற்றும் TEPU மாநில தலைவர் C இளங்கோவன் ஆகியோர் தலைமையேற்க NFTE மாவட்ட செயலர் தோழர். S  பழனியப்பன், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். 

NFTE சம்மேளன செயலர் தோழர். G ஜெயராமன் தேர்தல் பிரசாரத்தை நமது மாவட்டத்தில்  துவங்கிவைத்தார்.

NFTE அகில இந்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளர் தோழர். காமராஜ், மாநில துணைத்தலைவர் தோழர். மனோகரன், சிறப்பு அழைப்பாளர். தோழர். சேது ஆகியோர் பங்கேற்றனர். 
SEWA BSNL மாவட்ட செயலர் தோழர். செந்தாமரை கண்ணன், TEPU சங்கத்தின் மாநில செயலர் தோழர். கிருஷ்ணன், அகில இந்திய பொருளர் தோழர். M கண்ணதாசன் ஆகியோர் BSNLEU சங்கத்தின் இயலாமையால் கடந்த காலங்களில் ஊழியர்கள் அடைந்த இழப்புக்கள் பற்றி எடுத்துரைத்தனர். NFTE சங்கத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
TEPU  சங்க அகில இந்திய பொது செயலர் தோழர். V சுப்புராமன் தனது சிறப்புரையில், BSNLEU சங்கத்தின் பேச்சுவார்த்தை திறனில் உள்ள இயலாமைகளை சுட்டிக்காட்டினார். தங்கள் சங்கத்தின் தோள்களில் ஏறி நின்று தங்கள் உதவியுடன் அடைந்த பலன்களை BSNLEU - ன் சாதனைகளாக பேசிவருவதாக குறிப்பிட்டார். வரும் காலங்களில் நமது பிரச்சனைகளை தீர்க்கவேண்டுமென்றால் NFTE சங்கம் முதன்மை அங்கீகார சங்கமாக வரவேண்டும் என வலியுறுத்தினார்.

NFTE சங்க அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம்  அஹமது விழா பேருரையாற்றினார். 

தனது உரையில் NFTE சங்கத்தின் சாதனைகளை விளக்கி பேசினார்.குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் NFTE சங்கத்தால் ஏற்பட்ட முன்னேற்றங்களை குறிப்பிட்டார். 

லாபத்துடன் இணைந்த போனஸ் என்பதை மாற்றி உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என இன்று ஏற்க வைத்தது. ஊழியர் பெயர் மாற்றம், RM / Gr D ஊதிய தேக்கம், நேரடி ஊழியர்கள் ஊதிய இழப்பை தடுத்தல், JTO  / JAO தேர்வு தகுதியை 5 ஆண்டுகளாக குறைத்து, 78.2 சத IDA இணைப்பு பெற்றது உள்ளிட்ட பிரச்சனைகள் NFTE சங்க அனுபவத்தால்  / செயல்பாட்டால் தீர்வை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டினர். NFTE சங்கம் வெற்றி பெற்று முதன்மை அங்கீகார சங்கமாக வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

மாநில செயலர் தோழர் பட்டாபி நிறைவுரையாற்றினார். தோழர். இஸ்லாம் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்க தொகுப்பையும் சேர்த்து  சிறப்புரையாற்றினார். தேசிய பேச்சுவார்த்தை குழுவில் (NJCM ),  NFTE -ன் சிறப்பான பங்களிப்பு அதன் மூலம் தீர்க்கப்பட்ட பிரச்சனைகள், NFTE -ஐ முதன்மை அங்கீகார சங்கமாக தேர்ந்தெடுத்து அதன் முலம் கூட்டு பெற சக்தியை வலிமை படுத்துவது அவசியம் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் பேசினார். 

நிறைவாக மாவட்ட பொருளர் தோழர். ஆண்டிசாமி நன்றி கூற விழா நிறைவு பெற்றது.

வெயில் மற்றும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் மாவட்டம் முழுதும் இருந்து சுமார் 300 தோழர்கள் கலந்துகொண்ட துவக்க விழா NFTE சங்கம் திருச்சி மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தி, மீண்டும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்கும் என்ற உண்மையை வெளிபடுத்தும் விழாவாக அமைந்தது.






























No comments: