NFTE - வெற்றியை உரத்து சொல்லிய பாட்னா அகில இந்திய செயற்குழு!
              நாடு முழுதும் இருந்து 500 சார்பாளர்கள் , அகில இந்திய தலைவர்கள் மாநில செயலர்கள், மாவட்ட செயலர்கள் பங்கேற்ற சிறபான செயற்குழு. பாட்னா மத்திய செயற்குழு
                காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட மத்திய செயற்குழுவில் TEPU சங்க பொதுசெயலாளர் தோழர் சுப்புராமன், SEWA பொதுசெயலாளர் தோழர் ND ராம், BSNLMS பொதுசெயலாளர் தோழர் சுரேஷ்குமார் , NFTBE தோழர் கோஹ்லி, தோழர் சஜ்வாணி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.
                 01-01-2017 முதல் வரவேண்டிய சம்பள மாற்றம், போனஸ், HRA -க்கு 78.2 இணைப்பு,  பதவி உயர்வில் SC / ST சலுகைகள், நேரடி ஊழியர்கள் பிரச்சனைகள், பென்சன், ஆட்கொல்லி CDA விதி 55 ii b அமலாக்கம், டவர் கம்பெனி உள்ளிட்ட பிரச்சனைகள் மீது ஆழ்ந்த விவாதம் நடைபெற்றது. 
                எதிர் வரும் 7 வது சரிபார்ப்பு தேர்தல் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது. பாட்னாவில் பிரிந்து சென்று, மீண்டும் பாட்னாவில் ஒன்று கூடிய தோழர்கள் கொஹ்லி, சஜ்வாணி ஆகியோர் தங்கள் உருவாகிய NFTBE கலைத்து மீண்டும் NFTE  உடன் இணைவோம் என அறிவித்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது..
              புதிய கூட்டணிகள் உருவாக உள்ள சூழலில், NFTE சங்கம் பெரும் வெற்றியை பெற்று முதன்மை அங்கீகார சங்கமாக உருவாக உறுதியேற்கப்பட்டது.. 
             மொத்தத்தில்  NFTE - வெற்றியை உரத்து சொல்லிய  அகில இந்திய செயற்குழு - பாட்னா செயற்குழு!
  | 
| NEC அரங்கம்  | 
  | 
| கொடியேற்ற நிகழ்வில் தோழர்களுடன்  | 
  | 
| அகில இந்திய தலைவர். தோழர்.இஸ்லாம் அஹமது  | 
  | 
| தோழர் R K கொஹ்லி உரை  | 
  | 
| TEPU பொது செயலர் தோழர் சுப்புராமன் உரை. | 
  | 
| SEWA BSNL பொது செயலர் தோழர். ND ராம், உரை, | 
  | 
| BSNLMS பொது செயலர் தோழர். சுரேஷ் குமார். | 
  | 
| அரங்கில் தமிழக தோழர்கள்  | 
  | 
| அரங்கில் தோழர் மதி & தோழர் ஜெயராமன். | 
  
  | 
| முதல் போஸ்டர் வெளியீடு. | 
  | 
| NFTE வெற்றிக்கு தலைவர்களின் சூளுரை  | 
  | 
| தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபி உரை  | 
  | 
| சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர். மதி உரை. | 
  | 
| பொது செயலருடன் திருச்சி தோழர்கள். | 
 
 
No comments:
Post a Comment