Wednesday, June 29, 2016

தோழர். பன்னீர் செல்வம் -
 பணி நிறைவு விழா!

     நமது சங்க கண்டோன்மெண்ட் கிளை செயலர் தோழர். பன்னீர் செல்வம் அவர்கள் இம்மாதம் பணி நிறைவு பெறுகிறார்.
     திருச்சி நகரில் மஸ்தூர் சங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் அன்றைய நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு பணிநிரந்தரம் பெற்றவர்.
     பணி காலம் முழுதும் ஒரு நேர்மையாளனாக, துடிப்பு மிக்க தொழிற்சங்க தோழனாக, திருச்சி நகரின் முன்மாதிரி பணியாளராக, ஒப்பந்த ஊழியர் சங்க  அமைப்பாளராக வாழ்ந்து காட்டியவர்.
    25-06-2016 அன்று அவர் அளித்த மதிய விருந்துடன் சேர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், சம்மேளன செயலர் தோழர். ஜெயராமன், தோழர். RV , தோழர்.  காமராஜ்,தோழர்.,செல்வராஜ், தோழர். பழனியப்பன், தோழர்.சுந்தரம், தோழர். பாலகுரு, தோழர்.மில்டன், தோழர். ஆசைத்தம்பி, தோழர். ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் பாராட்டுரை வழங்கினார்.
விழா பதிவுகளை காண இங்கே சொடுக்கவும். 

No comments: