Saturday, April 17, 2010

வேலை நிறுத்தத்தை வெற்றிகரமக்குவோம்! 
16 - 04 - 2010 அன்று கூட்டு நவடிக்கை குழு தலைவர்களுக்கும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அ.ராசா அவர்களுடனும் மற்றும் பிராந்திய தொழிலாளர் ஆணையர் அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தைகளில் நல்ல முடிவுகள் ஏற்படவில்லை. எனவே நமது போராட்ட திட்டமான ஏப்ரல் 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என்பதில் மாற்றம் இல்லை! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமக்குவோம்!
பேச்சுவார்த்தை விவரங்கள்!
  • ITS அதிகாரிகள் உள்நுழைவு 3 மாதத்தில் முடிவு செய்யப்படும்.
  • பங்கு விற்பனை , VRS போன்ற சாம் பிட்ரோடா கமிட்டி பரிந்துரைகள் பிரதமரின் பரிசீலனையில் உள்ளது. டெலிகாம் கமிஷன் மற்றும்.அமைச்சர்கள் குழு ஆலோசனைக்கு பிறகு தொழிற்சங்கங்களுடன் விவாதித்த பிறகு அமல்படுத்தப்படும்.
  • BSNL காப்பர் கேபிள்களை முழுமையாக பயன்படுத்த அமைச்சர் CMD இடம் அறிவுறுத்தினர்.
  • ஓய்வுதிய பிரச்சனை மூன்று மாதங்களில் தீர்க்கப்படும்.
  • 93 மில்லியன் செல் இணைப்புகள் டெண்டர் ரத்து மற்றும் புதிய டெண்டர் போடுவது ஆகியவற்றில் BSNL போர்டு விரைந்து முடிவெடுக்கும். 
மேற்கண்ட விவரங்கள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்பதால் நமது போராட்ட திட்டமான ஏப்ரல் 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என்பதில் மாற்றம் இல்லை. தொழிற்சங்க கூட்டு நவடிக்கை குழுவின் அடுத்த கூட்டம் 19-04-2010  அன்று நடைபெறும். 

No comments: