Sunday, April 4, 2010

  
ஊதிய மாற்றம் - பதவி உயர்வு திட்டத்தின் பாதையிலா?

             BSNL நிர்வாகமும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் அதிகாரபூர்வ உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவில்லை. ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகள் அரசை கட்டுபடுத்தாது என காரணம் காட்டி ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை DOT அதை BSNL -க்கு திருப்பி அனுப்பிவிட்டது. 
             நாம் அது போன்ற உடன்பாடு அவசியம் என கூறிவந்துள்ளோம். 2002 -ஆம் ஆண்டு போடப்பட்ட முதல் ஊதிய மாற்ற உடன்பாடு கூட “Agreement between Management of BSNL and representative of new applicant unions”என்று தான் வந்தது. அதில் CMD , Director (HRD) உள்ளிட்ட அதிகாரிகள் BSNLநிவாகத்தின் சார்பில் கையெழுத்திட்டு உள்ளனர். ஆனால் ஊதிய மாற்றத்தில் பல விசயங்களில் கோட்டை விட்ட நம்பூதிரி இதிலும் கோட்டை விட்டுள்ளார். இதனால் ஊதியமாற்றம் மேலும் சில வாரங்கள் தாமதமாகும்.
            ஏற்கனவே 2008 -ல் ஏற்பட்ட பதவி உயர்வு உடன்பாடு இதே போல் DOT  யால் திருப்பி அனுப்பப்பட்டு 2010 -ல் உத்தரவாக வரும்போது பல பரிந்துரைகள் வெட்டப்பட்டு ஒரு அரைகுறை பதவி உயர்வு திட்டமாக பலருக்கு பலன் தராத திட்டமாக வந்துள்ளது. இப்போது அந்த திசைவழியில் ஊதிய மாற்றமும் செல்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அனுபவம் அற்ற அரைகுறை பேர்வழிகளின் செயல் தொடர்ந்து ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது.

No comments: