Wednesday, May 5, 2010

கார்ல் மார்க்சின் சிந்தனைகள்!
*உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.

* விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது. 

* சமூதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.

* நம்முடைய முந்தைய தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால், தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவது தான்.

* மனிதனின் வாழ்க்கையை அவனது மனசாட்சி நிர்ணயிப்பதில்லை. ஆனால், சமூக வாழ்க்கை தான் அவனது மனச்சாட்சியை நிர்ணயிக்கிறது.

***இன்று கார்ல் மார்க்சின் பிறந்த  நாள்.***

No comments: