Wednesday, September 15, 2010

நமது விடுப்பு பணம் - இனி LIC கையில்!

                      நாம் நமது பணிக் காலத்தில் சேர்த்துவைத்துள்ள விடுப்பை. அதற்குண்டான தொகையை ( அதிகபட்சம் 300 நாட்கள்) நமது பணி ஒய்வின் போது இதுவரை நிர்வாகமே நேரடியாக நமக்கு கொடுத்துவந்தது.  ஆனால் இனி அது LIC - ன் கையில்! 
                     கடந்த 09 - 09 - 2010 அன்று LIC's Group Leave Encashment Cash Accumulation Scheme (GLES), என்ற புதிய திட்டத்தின் கீழ் RS .4853 கோடியை பிரிமியம் தொகையாக நமது நிறுவனம் LIC - யிடம் அளித்துவிட்டதம்! 
                     இது பற்றி வெளிப்படையாக ஊழியர்களிடம் தெரிவிக்காமல் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நமது காப்பிட்டு திட்டம் ஊழியர்களிடம் கருத்து கேட்காமல் LIC - கொடுக்கப்பட்டது. இதில் பலர் கமிசன் பெற்றதாக இன்றுவரை குற்றச்சாட்டு உள்ளது. புதிய திட்டத்திலும் முன்னாள் CMD மற்றும் பலர் பலன் அடைந்துள்ளதாக நம்பபடுகிறது.  மேலும் LIC நமது பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதன் லாபத்தில் இருந்து தான் நமக்கு பணம் தருமாம். இன்றைய பங்கு சந்தை பற்றியும், அதன் சூதாட்டங்கள் பற்றியும் நாம் நன்கு அறிவோம். 
                  இப்படியாக நமது விடுப்பு பணம் இன்று பெரிய ஆபத்தில் உள்ளது. இது பற்றி அங்கீகார சங்கத்திற்கு சொல்லப்பட்டதா? அல்லது காப்பிட்டு திட்டம் போல இதிலும் தெரிந்தே, நிவாகத்திற்கு தலை அசைத்து, ஊழியர்களை சிக்கலில் மாட்டியுள்ளதா? இது அனைவர் மத்தியிலும் உள்ள கேள்வி.

No comments: