மகளிர் தினம்!
மதியில் கால் வைத்து 
மகத்துவம் யாம் படைத்த போதினும்,
மிதிபட்டு  கொண்டு தான் 
இருக்கிறோம்
மாதராய் பிறந்தமையால்...
திருமண சந்தையில்  - 
சீர்
திருத்தும் இன்னும் வரவில்லை1
லட்சங்கள் விலைபேசும் கண்களுக்கு 
பெண்
இலட்சியங்கள் தெரிவதில்லை......
பால் மணம் மாறா பருவ 
-
பாலியல் பலாத்காரம் குறையவில்லை?!
பேதையாய்  நிற்கும் 
பெண்ணை
போதையாய் பார்க்கும் அவலம் அகலவில்லை !!
மங்கையரின் 
பெருமை பாடுவார்
மகவை பெண் பிறந்தாலோ 
வசைமொழிவர்......
ஆணாதிக்க சமுகத்தில்  - அடிமையாய்
அகதியாய் பெண் நிலை 
தாழ்வு !
தாய்மையின் தியாகத்தில் 
தன்னிறைவாய் நம் வாழ்வு.
தன்-நலம் மறந்து,
தனித்துவம் 
துறந்து....
மரமாகி நிற்பதலோ,
மார்தட்டி கொண்டாடுகிறோம்
மகளிர் தினத்தை??
அதுவும் 
சரிதான்!,
ஒதுக்கபட்டவர்க்கு தானே
ஓர் தினம் 
அனுசரிக்கபடுகிறது!
No comments:
Post a Comment