Sunday, September 22, 2013

கோலாகலமான சங்க அலுவலக திறப்பு விழா!

       நமது சங்க அலுவலக திறப்பு விழா 20-09-2013 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் வருகை தந்த அனைத்து அதிகாரிகளையும், தோழமை சங்க தோழர்களையும், திரளாக பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்களை வரவேற்று மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் வரவேற்புரையற்றினார்.
       DGM (A)
திரு. குமரேசன் அவர்கள் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தின் தொழிற்சங்க வழிகாட்டி RV அவர்கள் தோழர்கள் குப்தா, ஜெகன் ஆகியோரது படத்தை திறந்துவைத்தார். சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் அவர்கள் உணர்வுபூர்வமான சிறப்புரையை  ஆற்றினார். AGM(A) திரு சிவராஜன் மற்றும் அனைத்து தோழமை சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்க தோழர் ஆறுமுகம் நன்றியுரை வழங்க விழா இனிதே முடிவுபெற்றது. 

"NFTE சங்க அலுவலகம்  NFTE உறுப்பினருக்கு என்று மட்டுமல்லாமல் அனைத்து ஊழியர்களின் நலன்கள் பற்றி விவாதிக்கும் இடமாக, அனைத்து சங்கத்தினரும் வருகை தரும் இடமாக, மூடபடாத ஒரு செயல்பாட்டு தளமாக விளங்க வேண்டும்" என்ற சம்மேளன செயலரின் வாழ்த்துரைக்கு செயல் வடிவம் கொடுக்கும் உறுதிப்பாட்டோடு விழா நடந்தேறியது. 

தலைமையுரை.

வரவேற்புரை 

DGM (A) அலுவலகத்தை திறக்கும் காட்சி.
RV   படத்தை திறக்கும் காட்சி.
DGM (A) அவர்களின் வாழ்த்துரை.

AGM (A) அவர்களின் வாழ்த்துரை.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் அஸ்லாம் பாட்சா  அவர்களின் வாழ்த்துரை.
AIBSNLOA  மாவட்ட செயலர் தோழர் காமராஜ்  அவர்களின் வாழ்த்துரை.
TEPU  மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்களின் வாழ்த்துரை.
AIBSNLEA  மாவட்ட செயலர் தோழர் மோகன் அவர்களின் வாழ்த்துரை.
FNTO  மாவட்ட செயலர் தோழர் சந்திரசேகரன் அவர்களின் வாழ்த்துரை.

SNEA  மாவட்ட செயலர் தோழர் ஜானகிராமன் அவர்களின் வாழ்த்துரை.
தோழர் செஷாஸ்திரி சம்மேளன செயலருக்கு சால்வை அணிவிக்கிறார்.
சம்மேளன செயலர் சிறப்புரையாற்றுகிறார்.
SNATTA  மாவட்ட செயலர் தோழர் முரளிதரன் அவர்களின் வாழ்த்துரை.
BSNL SEWA மாவட்ட செயலர் தோழர் கருப்பையா அவர்களின் வாழ்த்துரை.
BSNLAEU மாவட்ட செயலர் தோழர் நாகராஜன் அவர்களின் வாழ்த்துரை.
SEWA BSNL மாவட்ட பொறுப்பாளர்  தோழர் வேலுசாமி அவர்களின் வாழ்த்துரை.
NFTE  மாநில துணை செயலர் தோழர் சுந்தரம் அவர்களின் வாழ்த்துரை.
புதுகை தோழர்களின் நினைவு பரிசு வழங்குதல் நிகழ்வு  
சங்க அலுவலகத்தினுள் . . .
சங்க அலுவலகத்தினுள் . . .

No comments: