Friday, December 6, 2013

டிசம்பர் -6, அம்பேத்கார் நினைவு நாள்!
 
  • என்னைவிட உயர்ந்தவன் இருக்கிறான் என்று தாழ்த்தப்பட்டவன் எண்ணிக் கொள்கிறான்; என்னைவிடத் தாழ்ந்தவன் இருக்கிறான் என்று உயர்ந்த நிலையில் உள்ளவன் எண்ணிக் கொள்கிறான்; இரண்டுமே நல்லதல்ல! உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே தவறு.
  •  சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம்! அதை இழந்து வாழ்வது மிகப் பெரிய அவமானம். சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது எளிதான காரியமல்ல. பல துன்பங்களை எதிர்கொள்ளும்படி இருக்கும்; கடினமாகவும் போராட வேண்டியிருக்கும்.
  • வறுமை யாருக்கும் விதிக்கப்பட்டதில்லை! அது உடன்பிறந்ததோ, தீர்க்க முடியாததோ அல்ல! "இது விதி' என்றோ "இதுதான் விதி' என்றோ எண்ணிக் கொள்ளாதீர்கள்!
  • மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமானால் அரசியல் அமைப்பு மக்களின் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைத் தீர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
  • யார் ஒழுக்கமும் நேர்மையும் உடையவராய் சமுதாயத்துக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறாரோ அவர்தாம் தொண்டு செய்யத் தகுதியானவர்.
  •  நியாயமும் நேர்மையும் உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் போராட்டம் நீங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்குத்தானேயன்றி பணம் பதவிகளுக்காக அல்ல!
 =========================================================

         ஒரு தலைவரை நினைவு கூற இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, அவரை வணக்கத்திற்குரிய குறியீடாக மாற்றி, அவரது பிறந்த / நினைவு நாளில் மாலை மரியாதை செய்வது. இரண்டாவது, அத்தலைவரின் கொள்கைகளை சமூகத்தில் உயிர்ப்புடன் பரவச்செய்வது. ஆனால் இன்று பெரும்பாலோர் முதல் ரகத்தை சேர்ந்தவர்களாக  இருக்கின்றனர்.  இன்று பத்திரிக்கையில் படித்தது !

========================================



 

No comments: