Saturday, February 8, 2014

சிட்டகாங்க் வீராங்கனை கல்பனா தத்
             விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், பிரிக்கப்படாத வங்காள மாகாணத்தில் இடம் பெற்றிருந்த சிட்டகாங் நகர ஆயுதக்கிடங்குத் தாக்குதலானது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். காந்திஜியின் சமரசப் போராட்ட முறைகளினால் மாற்றத்திற்குள்ளாகியிருந்த இளைஞர்கள் மத்தியில் இது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. சிட்டகாங் வீரர்கள் காட்டிய துணிச்சலும் அர்ப்பணிப்பு உணர்வும் ஈடு இணையற்றது. 

            இன்றும்கூட அது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர் தோழர் கல்பனா தத் சூர்யா சென் எனும் புரட்சியாளர் தலைமையில் ஆயுதம் தாங்கி இந்திய விடுதலைக்கு போராடியவர். 
           1940-ல்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பொது செயலர் PC. ஜோஷி-ஐ மணமுடித்து தனது வாழ்நாள் முழுதும் போராட்ட பாதையில் வாழ்ந்தவர் . 

            அவரது நினைவு தினம் பெப்ரவரி - 8, இன்று. 

No comments: