Thursday, December 4, 2014

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து மத்திய சங்கங்கள் அனைத்தும்   இணைந்து போராடும் மாபெரும் எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்! திரளாய் கலந்து கொள்வோம்! 

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில்...
  • தொழிலாளர் நலனுக்கு எதிராக  தொழிலாளர்  சட்டங்களைத் திருத்தும் போக்கை கைவிடு...
  • தொழிலாளர் பிரச்சினைகளில் தொழிற்சங்கங்களை ஆலோசனை செய்...
  • நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...
  • பதிவு செய்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்க பதிவு எண் வழங்கு...
  • நிரந்தர ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கு..
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.15000/= வழங்கு...
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.26000/= வழங்கு...
  • பாதுகாப்பு, இரயில்வே,ஆயுள் காப்பீடு மற்றும் ஏனைய பொதுத்துறைகளில் அந்நிய வெளிநாட்டு மூலதனங்களை அனுமதிக்காதே...
  • வங்கி ஊழியர்களுக்கு சம்பள திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமுல்படுத்து..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 50 சத விலைவாசிப்படியை இணைத்து வழங்கு..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்வு இல்லாமல், தேர்வுக்குழு இல்லாமல் நான்கிற்கு மேற்பட்ட  பதவி உயர்வு வழங்கு.
  • போனஸ் உச்சவரம்பை உயர்த்து..
  • போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பை உயர்த்து..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய த்தை உயர்த்து...
  • ஓய்வூதியர்களுக்கு உரிய மருத்துவப்படி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான சலுகைகளை வழங்கு...
  • புதிய ஓய்வூதிய விதிகளை தொழிலாளர்களுக்கு நலன் தரும் வகையில் திருத்தி அமை..





No comments: