Wednesday, January 21, 2015

சந்தை நிலவரம்
போட்டிகள் நிறைந்த ஒரு துறையில் ஒரு நிறுவனம் குறைந்த பட்சம் 30 சதவிகிதத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தால் அது ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என்பது வணிக விதி.
உதாரணமாக தொலைத்தொடர்புச் சேவையில்  மொத்தம் 100 இணைப்புகள் இருந்தால் ஒரு நிறுவனம் 30 இணைப்புகளைத் தனது கணக்கில் வைத்திருந்தால் அது
ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகக் கருதப்படும்.
நமது நாட்டில்   எந்த ஒரு நிறுவனமும் 30.12.2014 அன்றைய தேதியில் அந்த நிலையில் இல்லை.
அதன் விபரம்
1.ஏர்கடெல்  22.68%
2.வோடாபோன் 18.37%
3.ஐடியா          15.37
4.ரிலையண்ஸ்  11.12%
5.பி.எஸ்.என்.எல் 10.34%
6.ஏர்செல்   8.06%
7.டாட்டா இண்டிகாம்  6.96%
8.யுனினார்  4.40%
9. ஷியாம் 0.94%
10.எம்.டி.என்.எல்  0.72%
11.  வீடியோகான் 0.65%
12.குவாடரண்ட்    0.28%
13. லூப் மொபைல் 0.14

நமது நாட்டில் 96 கோடியே 49  லட்சம் தொலைபேசி இணைப்புகள்  (லேண்ட்லைன் மற்றும் மொபைல்) 30.12.2014 அன்று இயங்குவதாக தகவல்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 63.03 சதவிகித லேண்ட்லைன் இணைப்புகளையும், 10.27 சதவிகித மொபைல் இணைப்புகளையும் கொண்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 27.44 சதவிகித மொபல் இணைப்புகளைக் கொண்டுள்ளது.

வோடாபோன் நிறுவனம் 22.56 சதவிகித மொபல் இணைப்புகளைக் கொண்டுள்ளது.

ரிலையண்ஸ் 48.02 சதவிகித  வில் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுள்ளது.

டாட்டா இண்டிகாம் 43 .01 சதவிகித வில் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுள்ளது.

லேண்ட்லைன் சேவையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் முதலிடத்தை 15 ஆண்டுகளாகத் தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இது பலமா பலகீனமா என்பது ஆய்வுக்குரியது.

பி.எஸ்.என்.எல் சரிவுக்கு காரணங்க்கள்
  • வில்  தொழில்நுட்பத்தில்  அக்கறை காட்டாதது.
  • மொபைல் சேவையில் வளர்ச்சியடைய் முடியாத அளவுக்கு திட்டமிடப்பட்ட ஏராளமான தடைகள் தடங்க்கல்கள்
  • வாடிக்கையாளர் குறைகளைக் களைவதில் கடுமையான சுணக்கம்,
  • வாடிக்கையாளர் சேவை மையங்க்களின்   சிறந்த செயல்பாட்டில் போதிய அக்கறையின்மை
  • போதுமான மார்க்கெட்டிங்க் இல்லாமை.
  • திட்டமிடுவதில் வேகமின்மை
  • திட்டங்க்களைச் செயல்படுத்துவதிலும் வேகமின்மை
  • மனித வள மேம்பாடு என்றால் அது எங்கே விற்கிறது என்று கேட்கும் நிலை.
  • Courtesy - NFTE/ERD Web.

No comments: