Wednesday, April 22, 2015

பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்: பணிகள் முடக்கம்
தினமணி செய்தி...



பிஎஸ்என்எல் நிறுவனத்தை  புத்தாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் மேற்கொள்ளும் 2 நாள் வேலைநிறுத்தம்  செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருச்சி தொலைத் தொடர்பு வட்டத்தில் ஏறத்தாழ 80%-க்கும் மேலான அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டன.


தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வருவாய் மற்றும் லாபத்தில் முதலிடத்திலிருந்த பிஎஸ்என்எல் கடந்த 5 ஆண்டுகளை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே,


பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய வேண்டும். நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான உதவி சாதனங்களை வாங்குவதற்கு நிதி வழங்குவதாக


அறிவித்த மத்திய அரசு, உடனடியாக நிதியை வழங்க வேண்டும்.


ஊழியர்களைக் குறைக்கும் டெலாயிட்டி கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு


கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை தீர்வு காணப்படாததால், வேலைநிறுத்தத்துக்கு 19 சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.


செவ்வாய்க்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தத்தில் திருச்சி தொலைத் தொடர்பு வட்டத்திலுள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர்,  அரியலூர், புதுக்கோட்டை வருவாய்


மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள்,  ஊழியர்கள் என 1100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டன.


வேலைநிறுத்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, பிஎஸ்என்எல் வளாகத்தில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.


தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் S. பழனியப்பன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அஸ்லம்பாட்ஷா, அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள்


சங்கத்தின் எஸ். காமராஜ், இதர சங்க நிர்வாகிகள் ஜானகிராமன்,  மோகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். புதன்கிழமையும் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டையில். . .
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
By DN, புதுக்கோட்டை,
First Published : 22 April 2015 04:28 AM IST
அகில இந்திய அளவிலான இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றதால் புதுக்கோட்டையில் தொலைபேசி நிலைய சேவைப்பணிகள் முழுமையாக  முடங்கின.

கோரிக்கைகள்: தொலைத்தொடர்புத் துறையைப் புத்தாக்கம் செய்வதற்காக  மொபைல் கருவிகள், அகன்ற வரிசைச் சேவை வழங்குவதற்கான மோடம்கள், ட்ராப் வயர்கள்,

தொலைபேசிக் கருவிகள், கேபிள் உள்ளிட்ட கருவிகளின் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும், மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளைத்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகத் திகழும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் வழங்க வேண்டும், கிராமப்புறச் சேவைகளுக்கான நஷ்டத்தை ஈடுகட்டுவதாக

அளித்த உறுதியை மத்திய அரசு தட்டிக்கழிப்பதால், நஷ்டத்தில் இந்த நிறுவனம் இயங்குவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது போன்ற நெருக்கடிகளைத் தவிர்க்க


வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

No comments: